5201314 என்ற எண்ணிற்கு இது தான் அர்த்தமா? இணையத்தில் வைரலாகி வரும் சுவாரஸ்யமான பின்னணி
அண்மையில் 5201314 என்ற எண் சமூக வலைத்தளங்களில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
மர்ம எண்
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் மர்ம இலக்கம் 5201314 என்ற இலக்கம்.
இந்த இலக்கத்திற்கு என்ன அர்த்தம், எதனால் இந்த இலக்கம் தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை சிந்திக்க வைத்துள்ளது. மேலும், இந்த இலக்கத்தை சீனாவில், பல இணைய முகவரிகளில் பயன்படுத்துகின்றன.
உதாரணமாக, டேட்டிங் தளம் 5201314.com.எனப் பயன்படுத்தி வருகின்றனர்.
சுவாரஸ்ய பின்னணி
அதாவது 5201314 என்றால் 'நான் உன்னை எப்போதும் நேசிக்கிறேன் என்று அர்த்தமாம். இதில் முதல் எண்களான 5, 2, 0 ஆகியவை 'Wǔ'èr líng' என உச்சரிக்கப்படுகின்றன. இவ்வாறு உச்சரிக்கப்படும் இந்த ஒலியானது 'I love you' என்று பொருள்படும்.
மேலும், இந்த எண்ணகளின் இரண்டாம் பாதி '1314' என்பது 'yībèizi' உச்சரிப்பானது 'எப்போதும்' என்று பொருள்படும்.
அந்தவகையில், இந்த எண்ணிற்கான முழு அர்த்தம் சீன மொழியில், 'நான் உன்னை வாழ்நாள் முழுவதும் காதலிக்கிறேன்' என்பதன் உச்சரிப்பு 'Wǒ ài nǐ yībèizi'. எனவே, பல நெட்டிசன்கள் I love you forever' என்று தெரிவிக்க 5201314 என்ற எண்ணைப் பயன்படுத்துகின்றனர்.
சீனர்கள் ஆங்கிலத்தில் ILY போலவே, மாண்டரின் மொழியில் "ஐ லவ் யூ" என்று சமூக ஊடகங்களில் 520 ஐ ஸ்லாங் வார்த்தையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மேலும், மக்கள் இந்த எண்ணை விரைவில் அதை மே 20 (5.20) திகதியுடன் தொடர்புபடுத்தத் தொடங்கியுள்ளனர். பலர் சமூக ஊடகங்களில் மே 20 ஆம் திகதியை காதலர் தினமாகக் கருதத் தொடங்கி விட்டனர்.