Actor Prabhu: மூளையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை... நடிகை பிரபுவிற்கு நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பிரபு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபு, நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ஆவார்.
சங்கிலி என்ற படத்தில் அறிமுகமான இவர், பல படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியுள்ளார்.
சினிமாவிற்குள் நுழைந்து 15 ஆண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வந்ததுடன், அப்பா, மாமா போன்ற குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.
தற்போது 68 வயதாகும் நிலையில், கடந்த ஆண்டு PT சார் என்ற படத்தில் நடித்திருந்தார். சுறுசுறுப்பாக வலம்வரும் இவர், சில தினங்களாக காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை பரிசோதனை செய்ததில், மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகின்து.
நடுமூளை தமனியின் பிளவு பகுதியில் உள்ள உள் கரோடிட் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் காணப்பட்டதால் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
தற்போது சிகிச்சை முடிந்து இவர் வீடு திரும்பியதாகவும், முழு ஓய்வில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |