வைல்டு கார்டு போட்டியாளராக வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு வெளியேறிய மஞ்சரி- எவ்வளவு தெரியுமா?
வைல்டு கார்டு போட்டியாளராக வந்த மஞ்சரியின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
நாட்கள் பல கடந்தும் போட்டியாளர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது.
அதே சமயம் போட்டியாளர்களுக்கான போட்டிகளும் சூடுபிடிக்கும் வகைகயில் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த அக்டோபர் 6 தேதி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி 100 நாட்களில் முடிவுக்கு வரவுள்ளது.
கலந்து கொண்ட 24 போட்டியாளர்களில் பல போட்டிகளை கடந்து கடைசியாக பைனலுக்கு செல்லும் 5 போட்டியாளர்களில் மக்களின் அதிகமான ஆதரவை பெறும் போட்டியாளர் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்படுவார்.
மஞ்சரி வாங்கிய சம்பளம்
இந்த நிலையில், இன்னும் 2 வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் ராணவ் மற்றும் மஞ்சரி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஞ்சரி அங்கிருக்கும் சக போட்டியாளர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து விட்டு புன்னகையுடன் வெளியேறினார்.
வைல்ட் காட் என்றியாக வீட்டிற்குள் நுழைந்த மஞ்சரி பல சுவாரஷ்யமான அனுபவங்களை சக போட்டியாளர்களுக்கு கொடுத்திருந்தார்.
பாதியில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தாலும் மஞ்சரிக்கு ஒரு நாள் சம்பளமாக 10,000 ரூபாய் பேசப்பட்டிருந்தது. இதன்படி, மஞ்சரி 63 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அதற்கான தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
வெளியேறிய மஞ்சரிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |