Hypertension management: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்கணுமா? எளிய வழிகள் இதோ!
இரத்த அழுத்தம் தற்காலாத்தில் வயது வேறுபாடு இன்றி அனைவரையயும் பாத்திக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது.
இது "அமைதியான கொலையாளி" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இதற்கு பொதுவாக எந்த அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவது கிடையாது.
உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை அமைதியாக சேதப்படுத்துகிறது மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
உயர் இரத்த சிகிச்சையும் இல்லை. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு உங்கள் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்.
அப்படி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எவ்வாறான இயற்கை வழிகளை கையாளலாம் என்பது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தமானது இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் போன்ற பாரிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றது.
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால், உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உங்கள் எண்களை அறிந்துகொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களை எச்சரிக்கலாம் மற்றும் வடிவங்களைப் பார்க்க உதவும்.
காலப்போக்கில் உங்கள் முடிவுகளைக் கண்காணிப்பது, நீங்கள் செய்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் செயல்படுகிறதா என்பதையும் காண்பிக்கும்.
உங்கள் எண்களைக் கண்காணிப்பது, சிகிச்சைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்காணிக்க உங்கள் உடல்நலப் பாதுகாப்பு நிபுணருக்கு உதவும்.
இரத்த அழுத்தத்தின் சாதாரண வரம்பு 120/80, ஆனால் அது 140/90 ஐத் தாண்டினால், அது உயர் இரத்த அழுத்தமாக கருதப்படுகிறது.
முக்கிய காரணங்கள்
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சினை ஏற்படுகின்றது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி உயர் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டியது அவசியம்.
நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்படவர்களுகும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.
இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உட்பட முக்கிய உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டில் நமது உணவு முறை பாரிய தாக்கத்தை கொண்டிருக்கின்றது. தவறான உணவு பழக்கங்கள் குறிப்பாக உப்பு, மசாலா மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் பிரதான காரணியாக இருக்கின்றது.
உடற்பயிற்சியின்மை மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைப்பார்ப்பது போன்ற காரணிகள் இளைஞர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கின்றது.
ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் மன அழுத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பம அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலிநிவாரணிகள் போன்ற மருந்துகளின் அதிகப்படியான பயன்படுத்துவதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதுடன் உயர் இரத்த அழுத்தமும் ஏற்படுகின்றது.
உயர் ரத்த அழுத்த பிரச்சினை மரபு ரீதியாகவும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிகள்
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிக உப்பை சேர்த்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அதற்கு பதில் இளஞ்சிவப்பு உப்பை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
போதியளவு தண்ணீர் அருந்துதும் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது. குறைந்தது நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சியும் உதவும். இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் நடைபயிற்சி, நீச்சல், குதித்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளில் தினசரி ஈடுப்பட வேண்டும்.
மன அழுத்தம் மற்றும் கோபத்தைத் முற்றிலும் தவிர்க்க ,தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவதால் இரத்த அழுத்தம் இயற்கையாகவே சீரான நிலைக்கு திரும்பும்.
துரித உணவுகளின் நுகர்வை தவிர்த்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட தினசரி உணவை ஊட்டச்த்துக்கள் நிறைந்ததாக பார்த்துக்கொள்ள வேண்டும்.அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது.
கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்க உணவில் இருந்து நிறைவுற்ற கொழுப்புகளை அகற்ற வேண்டும்.
அதிகமான ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை உயர் இரத்த அழுத்தத்திற்கு இரண்டு முக்கிய காரணிகளாக இருப்பதால், மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றைக் குறைப்பதும் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க துணைப்புரியும்.
போதியளவான ஆழ்ந்த தூக்கமும் இரத்த அழுத்தத்தை இயற்கையாகக் குறைக்க பெரிதும் உதவும். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க ஒருவர் குறைந்தது 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கத்தை பெற வேண்டியது இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |