Arthritis-symptom: முடக்கு வாதம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? அறிகுறிகளும் சிகிச்சைகளும்
பொதுவாக முடக்கு வாதம் என்பது ஒரு நாள்பட்ட சிதைவுற்ற தன்னுடல் எதிர்ப்பு அழற்சி நோயாக அறியப்படுகின்றது.
மருத்துவ கண்ணோட்டத்தில் இது நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளின் புறணி திசுக்களைத் தாக்கும் போது ஏற்படும் ஒரு நோய்நிலையாகும்.
இதன் விளைவாக வலி, விறைப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் மூட்டுகளில் வெப்பம் ஏற்படுகிறது. ஆர்த்ரைட்டீஸ் என்பது மூட்டுகளில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும் உடல் கோளாறாக வகைப்பபடுத்தப்படுகின்றது.
இந்த பிரச்சினை மெதுவாக மற்றும் சிறிய அறிகுறிகளுடனேயே ஆரம்பிக்கும். பொதுவாக இது வாரங்கள், மாதங்களில் தொடங்க கூடும்.இந்த நாள்பட்ட நோயானது நபருக்கு நபர் வேறுபடலாம்.
மேலும் இது நாளுக்கு நாள் மோசமாகலாம். இந்த ஆர்த்ரைட்டீஸ் நோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து தெரிந்துகொண்டால் எச்சரிக்கையோடு இருந்து நோய் நிலையின் தீவிரத்தை தடுக்க முடியும். இது குறித்து ழுழுமையாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடக்கு வாதம் ஏன் ஏற்படுகின்றது?
உடலில் காணப்படும் வெள்ளை அணுக்கள் அதாவது நோய் எதிர்ப்பு மண்டலம் உடலுக்கு எதிராக வேலைசெய்ய ஆரம்பிப்பதன் விளைவாகவே இந்த முடக்கு வாதம் ஏற்படுகின்றது.
உடல் ஆரோக்கியமாக இருக்கின்ற போதே உடலில் நோய் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக நோய் எதிர்ப்ப மண்டலதட தவறாக கணித்து வெள்ளை அணுக்களை அதிகம் ஊற்பத்தி செய்ய ஆரம்பித்து விடும்.
அதன் விளைவாக மூட்டுக்களில் தாக்கமுடியாத வலி ஏற்படுகின்றது.முடக்கு வாதம் உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.
அறிகுறிகள் என்ன?
மூட்டு வலி
விறைப்பு (குறிப்பாக காலையில்)
வீக்கம்
சோர்வு
காய்ச்சல்
எடை இழப்பு போன்றன முக்கிய அறிகுறிகளாக பார்க்ப்படுகின்றது.
சிகிச்சைகள்
ஆர்த்ரிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் மூட்டு பகுதியில் தேய்ந்த சிறிய பகுதியை மட்டும் மாற்றி அமைக்கும் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை வசதிகள் இருப்பதால், மூட்டு பகுதியை முழுமையாக மாற்றும் அறுவை சிகிச்சை பற்றிய அச்சம் தற்காலத்தில் மக்களிடையே குறைந்த வருகின்றது.
ஆனால் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் முடக்கு வாதத்துக்கு தீர்வு காண முடியும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு மிக முக்கியமான அடிப்படை காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். குடலை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும் ஆவியில் அவித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலமும் முடக்கு வாதத்தை கட்டுப்படுத்த முடியும்.
முறையாக மருத்துவ ஆலோசனையுடன் சரியான வாழ்க்கை முறை மாற்றங்களையும் கடைப்பிடித்தல் அறுவை சிகிச்சை இல்லாமலேயே முடக்கு வாதத்தை குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |