ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்ட மணிமேகலை - பதிலடினா இப்படி இருக்கணும்
பிரபல டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை தற்போது நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்டுள்ளார்.

மணிமேகலை
பிரபல டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை, தன்னுடைய கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து ஜோடியாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
இவருடைய துரு துரு பேச்சிற்கு தற்போது பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் 2017ஆம் ஆண்டு, பிரபல நடன இயக்குநர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதில் மணிமேகலை இந்து ஹுசைன் முஸ்லிம் என இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தும் தற்போது வரை அதை எல்லாம் எதிர்த்து வாழ்ந்து வருகின்றனர்.

ரம்ஜான், பக்ரீத், மொகரம், மிலாது நபி என ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையிலும் மணிமேகலை கணவருடன் கொண்டாடுவார்கள். அதே போல மணிமேகலையின் கணவரும் மனைவியின் இந்து சம்பிரிதாயங்களையும் விழாக்களையும் கொண்டாடுவார்.
சமீபத்தில் ஹுசைன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு "சுவாமியே சரணம் ஐயப்பா" என தன் சமூக வலைதளத்தில்பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தன் கணவர் ஹுசைன் உடன் புத்தாடை அணிந்து மணிமேகலை போஸ் போட்டு்ளளார்.
அந்த பதிவில் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்க்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் “எனக்கே கடை பிரியாணி தான், என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க” என பதிவிட்டுள்ளார்.
இவர்களின் மதத்தை பற்றி பேசியவர்களுக்கு இவர்களின் திருமணத்திற்கு எதிராக நின்றவர்களுக்கும் மணிமேலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் சிறந்த பதிலடியை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |