சாப்பாடு சரியில்லாததால் வாக்குவாதம்! மகள் கண்முன் துடிதுடித்து இறந்த தாய்
சாப்பாடு சரியில்லை என்ற காரணத்தினால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.
சாப்பாட்டினால் ஏற்பட்ட சண்டை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்ற மாவட்டத்தில் ராம் ஜீவன் என்பவருக்கும் நவமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ராம் ஜீவன் சமீபத்தில் குடித்துவிட்டு மனைவியிடம் சாப்பாடு சரியில்லை என்று சண்டை போட்டுள்ளார்.
இதனை அடுத்து கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென ராம் ஜீவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்த மகள் அதிர்ச்சியில் கதறிய நிலையில், ராம்ஜீவனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சாப்பாடு சரியில்லை என்று ஆரம்பித்த வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.