மனைவிக்காக பல இலட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டிய கணவர்! அடுத்து என்ன செய்ய போகிறார் தெரியுமா?
மனைவிக்காக கோயில் கட்டி அவரை கடவுளாக வணங்கி வரும் கணவரின் செயல் பார்ப்பவர்களை வியப்படைய வைத்துள்ளது.
திருமண வாழ்க்கை
பொதுவாக திருமணம் பந்தத்தில் இணையும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் அன்பாக நடந்து கொள்வதை பார்த்திருப்போம்.
ஆனால் கோயில் கட்டி மனைவியை தெய்வமாக பார்க்கும் கணவர்கள் என்று பார்க்கும் போது அது சற்று குறைவாக தான் இருக்கும்.
வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவராக துணையாக இருக்கும் நேரத்தில் இருவரில் ஒருவர் பிரிந்து விட்டாலும் அது அதீத மன அழுத்தத்தை தோற்றுவிக்கிறது.
இதன்படி, திருபந்தூர் மாவட்டத்தில் வசிக்கும் சுப்ரமணி என்பவர் தன்னுடைய மனைவி ஈஸ்வரி கடந்த வருடம் இயற்கை மரணம் அடைந்த பின்னர் அவர் நினைவில் இருந்துள்ளார்.
மனைவிக்காக கோயில் கட்டிய கணவர்
ஆனால் இவரின் மனைவியின் பிரிவை நாளடைவில் தாங்க முடியவில்லை. இதனால் இவரின் இடத்தில் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவு செய்து கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
இந்த கோயிலில் தெய்வமாக அவரின் மனைவியின் சிலையை வைத்துள்ளார்.
இவரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை ஒரு மனிதராக கூட மதிக்காமல் துன்ப படுத்தும் கணவர்களுக்கு மத்தியில் மனைவியை தெய்வமாக மதித்து கோயில் கட்டிய கணவரின் செயல் பிரமிக்க வைத்துள்ளது.
அடுத்து என்ன செய்ய போகிறார் தெரியுமா?
இதனை தொடர்ந்து மனைவி இறந்த இன்னும் சில நாட்களில் ஒரு வருடம் நிறைவு செய்யவிருப்பதால், இந்த நிகழ்வை முன்னிட்டு 500 பெண்களுக்கு இலவசமாக சேலையும், சாப்பாடும் கொடுக்க போவதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ மனைவிக்கு கோயிலா?” என கமண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.