கணவன்- மனைவி அன்னியோன்யத்தை அதிகரிக்கும் பரிகாரம்.. புது தம்பதிகள் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தம்பதிகள் திருமணமாகி இரண்டு மூன்று மாதங்களில் வாய் தர்க்கங்களினால் மன உடைந்து போவார்கள்.
இது போன்ற நேரங்களில் உறவுகள் வந்து சமாதானம் செய்து இருவர் பக்கம் இருக்கும் நியாயங்களை பேசுவார்கள்.
இது தவறும் பட்சத்தில் இருவருக்கும் இடையில் இருக்கும் அன்னேியோன்யம் குறைந்து விடும். இதனை எப்படி சரிச் செய்வது என தெரியாமல் கணவன் ஒரு பக்கமும், மனைவி ஒரு பக்கமும் புலம்புவார்கள்.
இது காலப்பபோக்கில் தேவையற்ற விரிசலை உண்டு பண்ணும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகின்றது என பெரியவர்கள் கூறுவார்கள்.
அப்படியென்றால் திருமணத்தில் ஏதாவது கோளாறுகள் ஏற்படும் போது கடவுளிடம் வேண்டுதல்கள் வைத்து சரிச் செய்து கொள்ளலாம்.
ஆயிரம் பொய் சொல்லி நடக்கும் திருமணத்தை கூட பரிகாரங்களால் ஏழு ஜென்மங்களுக்கு நீடிக்க வைக்க முடியும் என ஜோதிடர்கள் கூறுவார்கள்.
அந்த வகையில் அன்னியோன்யத்தை அதிகரிக்க வைக்கும் ஒரு பரிகாரத்தை பற்றி திருமணமான தம்பதிகள் தெரிந்து கொள்ளுங்கள்.
கணவன் - மனைவி சேர பரிகாரம்
பொதுவாக கணவன், மனைவியின் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வதற்கும் உள்ள அற்புதமான விரத நாள் கார்த்திகை ஞாயிறு.
இது போன்ற நாட்களில் தமிழகத்தில் “ஸ்ரீவாஞ்சியம் ” திருத்தலத்தில் மகாவிஷ்ணு மகாலெட்சுமி இருவரின் அனுகிரகம் உள்ளது. அங்கு நீராடல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
புராணங்களின் படி, குப்த கங்கை தீர்த்தத்தில் இறைவனும், இறைவி எழுந்தருளி நீராடுகின்றனர். இதனையே கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை விஷேசமாக சிறப்பித்து வருகின்றனர்.
இவ்வாறு செய்வதால் கணவன்- மனைவியின் சரிபாதியாக இருக்க வேண்டும் என்பதனை உணர்த்தப்படுகின்றது.
கணவன்- மனைவி பிரிவு, கருத்து வேறுபாடு, அன்னியோன்யம் இன்மை போன்ற காரணங்களால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இது போன்ற பரிகாரங்களில் ஈடுப்பட்டால் சிறந்த பலனை பெறலாம்.
அந்த தலத்திற்கு செல்ல முடியாத பக்தர்கள் சிவன்கோவில், பெருமாள் கோவிலுக்குப் போய் தாயாரையும், இறைவனையும் வழிபட்டு வர வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |