பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற போவது யார்? பூர்ணிமா இல்லையா? சோகத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் இல்லத்தில் இருந்து இந்த வாரத்தில் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்தானத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இந்த வாரமும் பூர்ணிமா எவிக்ட் ஆகவில்லை என்பது பார்வையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷனாக அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேற அவர்களுக்குப் பதிலாக ஏற்கெனவே எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா மற்றும் அனன்யா இருவரும் உள்ளே வந்திருக்கிறார்கள்.
பிக் பாஸ் இல்லத்திற்குள் பூர்ணிமா மாயாவுடன் சேர்ந்து விளையாடுவது, அவ்வப்போது கமலை வம்பிழுப்பது என இருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாக அவர்தான் வெளியேறுவார் என பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அது இந்த வாரமும் மிஸ் ஆகியுள்ளது.
பிக் பாஸ் இல்லத்திற்குள் இந்த வாரத்தில் விசித்ரா, தினேஷ், அனன்யா ராவ், மணி, கூல் சுரேஷ், பூர்ணிமா, விக்ரம் மற்றும் ஜோவிகா உள்ளிட்ட எட்டு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
நாமினேட் ஆன எட்டுப் பேரில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பேரும் அதிக வாக்குகள் பெற்று இந்த வாரத்தில் முதலில் சேவ் ஆவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இரண்டு இடத்தில் இவர்கள் இருக்க கடைசி இரண்டு இடத்தில் விக்ரம் மற்றும் ஜோவிகா உள்ளனர்.
இந்த வாரம் விக்ரமை விட குறைவான ஓட்டுக்களை பெற்றிருக்கும் ஜோவிகா தான் வெளியேறுவார் எனவும் முதல் வாரத்திலேயே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட விசித்ராதான் டைட்டில் வின்னர் ஆவார் என ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |