மனிதர்கள் இறப்பதற்கு 15 நிமிடங்கள் முன்பு மனதில் என்ன தோன்றும்? விஞ்ஞானிகளின் முதல் பதிவு
மனிதர் ஒருவருக்கு மரணம் நெருங்கும் வேளையில் அவரது மனதில் கடைசி தருணங்களில் எந்த மாதிரியான எண்ணங்கள் ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் முதல்முறையாக பதிவு செய்துள்ளனர்.
87 வயது நோயாளி ஒருவர் கால்-கை வலிப்புக்கான சிகிச்சை அளித்த நிலையில், எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) உடன் இணைக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணத்தின் முதல் 15 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த நபர் தனது வாழ்க்கையின் கடைசி தருணங்களில், தனது வாழ்வின் சிறந்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருப்பதாக, அதன் மூலம் தெளிவாக பதிவாக உள்ளது.
நோயாளியின் இறுதி இதயத் துடிப்பு இறந்த 30 வினாடிகளின் போது மிக வேகமாக இருந்தததோடு, அந்த நேரத்தில் ஒரு தனித்துவமான அலை பதிவு செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
இந்த அலை காமா அலைவுகள் (Gamma Oscillations) என்று அழைக்கப்படுகிறது. இது நினைவை மனதில் சுமந்து கனவு காண்பது போன்றது.
இது குறித்து மேலும் அதிக ஆராய்ச்சி தேவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், ஒரு நபர் இறப்பதற்கு முன் தனது வாழ்நாளின் சிறந்த நினைவுகளை அசை போடுகிறார் என்று உறுதியாகக் கூறலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மரணம் சம்பவித்த நேரத்தில் அந்த நபரின் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது என்றும், உடல் இறந்த பிறகும் மனம் சுறுசுறுப்பாக இருக்கும் என்கின்றனர்.
மனிதர்களைத் தவிர, எலிகளிலும் இதேபோன்ற மூளை அலை மாற்றங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் மனிதர்களில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தனர்.