விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? வெளியான தகவல்
நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து மனு பொதுவெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த மனு கசிந்தது தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சங்கீதா
நடிகர் விஜய் மீது சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பெப்ரவரி மாதம் 27ம் திகதி பொதுவெளியில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்து.
மக்கள் பலரும் இந்த மனு எப்படி வெளியில் கசிந்தது அதுவும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதை யார் வெளியிட்டு இருப்பார்கள் என்ற கேள்வி பல எழுப்பினர். இது பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நாம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து மனு தாக்கல் செய்தால் அது யாரிடமும் செல்லாது ரகசியமாக தான் இருக்கும். இது பொதுவான விடயம்.
இந்த நிலையில் சட்ட விதிகளின்படி, இணையதளத்தில் கூட மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரரின் பெயர்கள் மறைக்கப்பட்டு, விவரங்கள் கசிந்துவிடாதபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.

அப்படி இருக்கையில் சங்கீதா மற்றும் விஜய் தொடர்பான விவாகரத்து மனு எப்படி சமூக வலைத்தள பக்கத்தில் எப்படி கசிந்தது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த குழப்பத்திற்கு தீர்வாக தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் மார்ச் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு அதற்காக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சந்திரசேகரன் விரிவான பதிலை அளித்துள்ளார்.

வெளியான பதில் தகவல்
இந்த விவாகரத்து மனு கசிந்தது தொடர்பாக இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மனுதாரர் தரப்பில் ‘இன் கேமரா’ முறையில் விசாரணை கோரப்பட்டிருந்தாலும், கசிவு குறித்து அவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று நீதிபதி பதில் அளித்துள்ளார்.
மேலும், நீதிமன்றமும் தானாக முன்வந்து (Suo Motu) எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக நீதிபதி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம்
சங்கீதா வழக்கு தொடர்ந்து கசிந்த அந்த விவாகரத்து மனுவில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை எதுவும் இடம் பெறவில்லை. பொதுவாக நீதிமன்றத்தில் இருந்து ஒரு ஆவணம் வெளியிடப்படுகிறது என்றால் அதில் நீதிமன்ற முத்திரை கண்டிப்பாக இருக்கும்.
ஆனால் விஜய் சங்கீதா விவாகரத்து மனுவில் அப்படி ஒரு விடயம் இல்லை.
இதன்படி பார்த்தால் இதை வேறு யாரோ தான் வெளியட்டிருக்க வேண்டும். அப்படி வேறு யாராவது இந்த மனுவை வெளியிட்டிருந்தால் அது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும்.

அப்படி வேறு யாராவது வெளியிட்டிருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் அதை புகார் செய்திருக்கலாம். ஆனால் மனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்து இதுவரை புகார் எதுவும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் ஆதித்ய சோழன், இந்த மனு சங்கீதா தரப்பில் இருந்துதான் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தன்னுடைய வாதத்தை முன்வைத்துள்ளார்.
இது தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் விவாதத்தை உண்டாக்கி வருகின்றது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து இன்னும் வரவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |