முகம், முடி இரண்டிற்கும் வைட்டமின் ஈ மாத்திரை: எப்படி பயன்படுத்தணும்?
பொதுவாக வைட்டமின் ஈ உடலுக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களில் ஒன்று.
தலைமுடி, சருமம் இவை இரண்டிற்கு எண்ணற்ற ஆரோக்கியத்தை இந்த வைட்டமின் வழங்குகின்றது. இந்த ஊட்டத்தை உணவில் இருந்து பெற்றுக் கொள்வதே சிறந்தது.
அப்படி உணவில் பெற்றுக் கொள்ள முடியாத போது வெளியிலுள்ள அப்ளிகேஷன்களாக எடுத்து கொள்ளலாம்.
இதன்படி, வைட்டமின் ஈ எடுத்துக் கொள்ளும் முறை தான் வைட்டமின் ஈ ஆயில் கேப்ஸ்யூல்.
அந்த வகையில், வைட்டமின் ஈ ஆயில் கேப்ஸ்யூல் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வைட்டமின் ஈ ஆயில் கேப்ஸ்யூல்
நகம்
பெண்களின் கை நகங்கள் பாத்திரங்கள் மற்றும் ஆடைகள் கழுவும் போது சிதைவடைவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இது போன்ற நேரங்களில் நகங்களை அழகாக வளர வைப்பதற்காக வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
உடைந்து வரும் நகங்களுக்கு இரண்டு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களைப் பிரித்து அதில் உள்ள ஆயிலை நகங்களின் மீது அப்ளை செய்யவும். பின்னர் இன்னொரு கையால் மசாஜ் செய்யவும். இந்த முறையை தொடர்ந்து செய்வதால் நகங்கள் நீளமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
முகம்
30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகத்தில் ஹைபர் பிக்மண்டேஷன் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இது அதிகமாகினால் முகமே அசிங்கமாக காட்சிக் கொடுக்கும்.
பயன்படுத்தும் முறை
முகத்தை நன்றாக கழுவிய பின்னர் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை எடுத்து அதனை ஹைபர் பிக்மண்டேஷன் உள்ள இடங்களுக்கு அப்ளை செய்யவும். பின்னர் கீழிருந்து மேல் நோக்கி வட்ட வடிவில் முகத்தை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹைபர் பிக்மண்டேஷன் குறையும்.
தலைமுடி
தலைக்கு பயன்படுத்தும் பொழுது இரண்டு விதமாக வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
1. குளிக்கும் பொழுது நாம் பயன்படுத்தும் ஷாம்பு, கன்டிஷ்னர்களில் வைட்டமின் ஈ ஆயிலைக் கலந்து பயன்படுத்தலாம். இது தலைமுடியின் வளர்ச்சியை நீக்கி தலைமுடி பளபளப்பாக்கும்.
2. தலைக்கு குளிப்பதற்கு முன்பு, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலுடன் கலந்து மசாஜ் செய்த பின்னர் அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். இது வேர் முதல் நுனி வரை சென்று தலைமுடியில் இருக்கும் பிரச்சினைகளை சரிச் செய்கிறது,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |