உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க!

Cholestrol Heart Failure Weight Loss Doctors
By Vinoja Apr 02, 2026 09:12 AM GMT
Report

பொதுவாகவே தற்காலத்தில் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு உடற்பயிற்ச்சி இன்மை, ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது போன்ற பல்வேறு காரணிகளால் பலரும் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் பருமன் தான் ஏராளமான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாகவும் அமைகின்றது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

அந்த வகையில் உடல் எடையை கட்டுக்குள் வைக்க துணைப்புரியும் ஆளி விதைகளை எவ்வாறு உணவில் சேர்த்துக்கொள்ளலாம், அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆளி விதைகள் நன்மைகள்

ஆளி விதைகள் தொன்று தொட்டு பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை விதையாக அறியப்படுகின்றது.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

Ranitidine மாத்திரை எதற்காக பயன்படுகிறது?

Ranitidine மாத்திரை எதற்காக பயன்படுகிறது?

இதில்,  அதிக எண்ணெய் தன்மை கொண்ட ஒரு விதை. இதில் ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் , ஆன்டி இன்பிளமேட்டரி தன்மையும் நிறைந்து காணப்படுகின்றது. 

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய நார்ச்சத்துக்கள் இவற்றில் அதிகமாக இருப்பதால் தான் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் இவை ஆற்றல் காட்டுகின்றது. 

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

குறிப்பாக மீனுக்கு இணையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த ஆளி விதைகளில் நிறைந்து காணப்படுகின்றது.  அதனால் ஆளி விதைகள் கார்டியோ வாஸ்குலர் நோய்களைத் தடுப்பதோடு , உடல் எடையையும் குறைக்கவும் பெரிதும் உதவுககின்றது.

இந்த கொழுப்பு அமிலங்களில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.  

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

உடல் எடையை குறைக்க வேண்டும் என போராடி வருபவர்களுக்கு இந்த ஆளி விதைகள் வரபிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.  காரணம் இவை  அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தி உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து அதன்மூலம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெறுவதற்கு உதவுகின்றது.ஆளி விதையில் நார்ச்சத்துக்கள் மிகவும் அதிகம்.

பொதுவாகவே நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதோடு நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகள் இயல்பாகவே குறைந்துவிடும். இதனால் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடை அதிகரிக்காமல் எளிதில் பராமரிக்க முடியும்.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

அது மாத்திரமன்றி  கலோரி அளவுகளிலும் ஆளி விதைகள் மிக மிகக் குறைவு. 100 கிராம் ஆளி விதையில் வெறும் 55 கலோரிகள் மட்டுமே காணப்படுகின்றது.

அதே சமயம் 100 கிராம் ஆளி விதைகளில் 18 கிராம் அளவுக்கு புரதத்தையும் நம்மால் பெற முடியும். குறிப்பாக இதிலுள்ள லிக்னான் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஹாமோன் சமநிலைக்கு உதவக் கூடியவை. அதேபோல தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் துணைப்புரியும்.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

இதை எப்படி சாப்பிட வேண்டும்?

பொதுவாக ஆளி விதையை மற்ற விதைகளைப் போல அப்படியே சாப்பிடலாமா அல்லது வறுத்து தான் சாப்பிட வேண்டுமா என்கிற சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி  ஆளி விதையை பச்சையாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் பச்சையான சாப்பிடும் போது,  எச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனால் ஆளி விதைகளை வறுத்த பொடியாகவோ, லட்டு போன்றவற்றிலோ, எண்ணெயாகவோ எடுத்துக்கொள்வது சிறந்தது. 

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியில் வெந்நீர் கலந்து டீ போல தயாரித்து குடிக்கலாம்.

சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக் கொள்வது போன்று அப்படியே தினமும் ஒரு ஸ்பூன் வீதம் ஆளி விதையை பொடியாகவே  சாப்பிடலாம்.  

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா?

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா?

ஆளி விதையை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அதை உங்களுடைய தினசரி ஸ்மூத்தியில் சேர்த்து குடிக்கலாம். அல்லது தயிர் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.

என்னதான் பல நன்மைகளை தந்தாலும், 1 தேக்கரண்டி விதைகளுக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, வாரத்தில் 3 முதல் 4 முறை இதனை வழக்கமாக நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க! | How To Use Halim Seeds For Weight Loss

ஆளி விதைகள் நச்சுத்தன்மை அற்றவை என்றாலும் கூட அவற்றில் உள்ள பைடிக் அமிலம், சயனோஜெனிக் கிளைகோசைடுகள் ஆகியவறை ஊட்டச்சத்து எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் சில சமயங்களில் அது சிலருக்கு ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் செரிமானக் கோளாறுகளையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.  எனவே  இது குறித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  





மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US