தீபாவளியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்: பணவரவும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
Budhaditya Rajyog on Diwali 2026 : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு தீபாவளி சிறப்புமிக்கதாக அமையவுள்ளது. ஏனெனில், அந்நாளில் பஞ்சமகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகக் கருதப்படும் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.
சூரியன் மற்றும் புதன் இணைவதால் ஏற்படும் இந்த ராஜயோகம், புத்திசாலித்தனம், மரியாதை, தொழில் வளர்ச்சி மற்றும் நிதி முன்னேற்றத்தை வழங்கக்கூடியதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக, வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம், நிலுவையில் உள்ள பணிகள் நிறைவு, நிதி நிலையில் உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கலாம்.
அப்படி புதாதித்ய ராஜயோகத்தால் பெரியளவில் அதிர்ஷ்டமும் நிதி ஆதாயமும் பெறவுள்ள ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12-ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மேலும், வருமானம் கணிசமாக அதிகரிக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது நன்கு சிந்தித்து செயல்படுவது அவசியம்.
மகரம்

மகர ராசியின் 10-ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வருமான வழிகள் உருவாகும்.
நீண்ட நாட்களாகக் கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். கடின உழைப்புக்கான பலன்களும் கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களின் திறமையும் செயல்பாடுகளும் பாராட்டப்படும். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும் காலமாக இது அமையும்.
மிதுனம்

மிதுன ராசியின் 5-ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நல்ல வேலை கிடைக்கலாம்.உங்களின் புத்திசாலித்தனமும் சரியான முடிவுகளை எடுக்கும் திறனும் நிதி நிலையை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உயர்த்த உதவும்.
குறிப்பாக இந்த காலக்டடத்தில் ஆரம்பிக்கும் தெழில் மற்றும் முதலீடுகளால் பெரியளவில் லாபம் ஈட்ட முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |