குதிகால் வெடித்து கொண்டே போகிறதா? ஒரே வாரத்தில் மறைய இதை மட்டும் செய்யுங்க
குதிகால் வெடித்து உங்களின் பாதங்களின் தோற்றத்தினை அசிங்கப்படுத்துகின்றதா?
அவற்றை உடனடியாக குணப்படுத்த வேண்டியது அவசியம்.
குதிகால் வெடிப்பை வீட்டிலேயே குணப்படுத்தும் சில மருத்துவ குணமுடைய பொருட்கள் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குதிகால் வெடிப்புக்கு தீர்வு
தேன்
தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் சேர்த்து, அந்த நீரில் உங்கள் கால்களை நனைக்கவும். பிறகு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்து இறந்த சருமத்தை மெதுவாக அகற்றவும்.
வாரத்தில் 3 முறை சரி செய்யுங்கள். நல்ல பலனை பெறலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும் சிறந்த பொருட்களில் ஒன்றாகும். காலை ஊறவைத்த பிறகு தேங்காய் எண்ணெயைத் தடவுவது நல்ல பலன்களை கொடுக்கும்.
மஞ்சள் மற்றும் அதிமதுர பொடி
அதிமதுர தூளில் உள்ள கிளைசிரைசின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தை பாதிக்கும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கும்.
மஞ்சள் அரிப்பு மற்றும் எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுகிறது. இரண்டையும் கலந்து வெடிப்பு இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தில் நல்ல பலன்களை பெற்று கொள்ளுங்கள்.