அரிசி கெட்டுப் போகாமல் பல நாட்களுக்கு பயன்படுத்த வேண்டுமா? ஈஸியான டிப்ஸ் இது தான்
இந்திய உணவுகளில் அரிசிக்கு என்று முதன்மையான இடம் ஒன்று இருக்கின்றது. அதே போல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் கண்டிப்பாக இருக்கும். அப்படி தினமும் சமைக்கும் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதை விட அதிகமாக வாங்குவது தான் வழக்கம்.
அதிகமாக வாங்கும் போது அது கெடாமல் பழுதாகாமல் வைத்திருக்க வேண்டும் அப்படி இந்த அரிசியை பழுதாகாமல் வைத்திருக்க சில டிப்ஸ் இருக்கிறது.
அரிசியை எப்படி பாதுகாப்பது
அரிசியை காற்றுப் புகாத பையில் கட்டி குளிர்ந்த அல்லது உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
சமைக்காமல் வைத்திருக்கும் அரிசியை காற்று புகாமல் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.
வீட்டிற்கு அரிசியை அதிகமாக வாங்கினால் பூச்சிகள் வராமல் தடுக்க பிரியாணி இலை, வேப்ப இலை என்பவற்றை அரிசியில் போட்டு சேமித்து வைக்கலாம்.
வீடுகளிற்கு மளிகை சாமான்களை வாங்கும் போது அரிசியையும் நறுமணம் கொண்ட பொருட்களையும் ஒன்றாக வாங்க கூடாது.
அரிசியில் பூச்சிகளை வண்டு தென்பட்டால் வெயிலில் சிறிது நேரம் நன்றாக காய வைத்து எடுத்தால் வண்டுகள் பூச்சிகள் இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |