உங்கள் கூந்தல் கருகருவென அலைபாயணுமா? இந்த டானிக் ஒன்றே போதுமே!
oil
coconut oil
hair loss
hair fall
By Nivetha
பொதுவாக பெண்கள் எல்லோருக்குமே கூந்தல் கருகருவென அலைபாய வேண்டும் என்ற ஆசை பலரிடையே உள்ளது.
அதற்கு பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகள் டானிக்குகளை வாங்கி உபயோகிப்பதுண்டு. இதனால் தலைமுடிக்கு பலவகை ஆபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றது.
இதற்கு இயற்கையாக கிடைக்கும் கூந்தல் டானிக்குகளை பாவிப்பதே சிறந்ததாகும்.
அப்படியொரு சிறந்த கூந்தல் டானிக்கையை தான் கருவேப்பிலை டானிக். கறிவேப்பிலை சமையலை மட்டுமல்ல கூந்தல் பராமரிப்பிலும் கூட முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்போது இந்த கூந்தல் டானிக்கை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- தேங்காய் எண்ணெய் - 100 மில்லி லிட்டர்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு (தேவைக்கேற்ப)
செய்யும் முறை
- முதலில் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
- அதை நன்றாக கொதிக்க விடவும். உங்கள் தேங்காய் எண்ணெய் உறைந்து இருந்தால் முதலில் அதை உருக்கி விட்டு பிறகு கறிவேப்பிலை சேர்த்து சூடுபடுத்தவும் கறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளவும். இந்த ஆயிலை தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும் படி 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
-
காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள். இதை 3 மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US