சுவையான சீப்பு சீடை தயாரிப்பு: தீபாவளி ஸ்பெஷல்
நமது வீடுகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன சுவிட்ஸ் செய்யலாம் என்று குழப்பத்தில் இருப்போம்.
அந்த வகையில் மிக இலகுவாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய சீப்பு சீடை எவ்வாறு செய்யலாம் தொடர்பில் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு - 2 கப்
- உளுத்தம் மாவு - அரை கப்
- கடலை மாவு - அரை கப்
- கெட்டியான தேங்காய் பால் - அரை கப்
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- சுடுநீர் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
ஒரு வட்ட வடிவ கோப்பையில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைந்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு முறுக்கு அச்சை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும்.
பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுக்கவும். தற்போது சீப்பு சீடை தயார்.