முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அப்போ தூங்கும் முறை பற்றி தெரிஞ்சிக்கோங்க
பொதுவாவே நம்மில் பலரும் முதுகு வலியால் பாதிப்படைந்திருப்போம். முதுகெலும்பு பிரச்சனைகளில் தாக்கம் செலுத்தும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன.
ஆரோக்கியமான முதுகெலும்பைப் பெற எப்படி உறங்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி உறங்க வேண்டும்?
முதுகெலும்பு பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று சரியான முறையில் உறங்குவது. ஆழ்ந்த உறக்கம் என்பது உடலுக்கும் மனதிற்கும் ஓய்வைத் தருவதோடு, ஆரோக்கியத்திற்கும் அவசியமானது.
மனதின் மூலமான உயிர் சக்தியை ஊக்குவிக்கும் உறக்கம், மனதை இலகுவாக்குகிறது ஆழ்ந்த உறக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது.
சிலர் படுத்த அடுத்த நிமிடத்திலேயே தூங்கிவிடுவார்கள். எங்கு படுத்தாலும் கவலையில்லாமல் தூங்கிவிடுவார்கள். ஆனால், எங்கு படுத்தாலும், நாம் படுக்கும் நிலை என்பது ஆரோக்கியத்தைக் கொடுக்கும் அதே வேளை ஆரோக்கியத்தை சீர்குழைப்பதாகவும் அமையலாம்.
நாம் உறங்கும் நிலை என்பது, நீண்ட கால அடிப்படையில் நமது முதுகுத்தண்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் மென்மையான மெத்தையில் படுப்பதும் முதுகுத்தண்டை பாதிக்கும், அதே சமயம் மிகவும் உறுதியான ஒரு மெத்தையும் முதுகுத்தண்டை பாதிக்கும்.
உங்கள் கழுத்தின் இயற்கையான வளைவை ஆதரிக்கும் தலையணையைப் பயன்படுத்தவும். அதிக தடிமனான தலையணைகள் அல்லது தலையணைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எப்போதும் தூங்கும் போது முதுகுதண்டு நேராக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |