முகத்தில் முடி வளர்வது நோயா? உதிர வைக்கும் பாட்டி வைத்தியம்
பொதுவாக பெண்களுக்கு முகம், கால், கை, மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்வது இயற்கை. ஆனாலும் குறிப்பிட்ட சில பெண்களுக்கு அவை அளவுக்கு அதிகமாக வளர்கிறது.
இந்த பிரச்சினையை சரிச் செய்வதற்காக பெண்கள் சந்தையில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இது போன்ற இரசாயனங்கள் தற்காலிகமாக பிரச்சினைக்கு தீர்வு கொடுத்தாலும், நிரந்தரமான தீர்வு கிடைப்பதில்லை. தேவையற்ற இடங்களில் முடி வளர்வது ஒரு நோய் நிலைமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அதாவது, “தேவையற்ற முக முடி” என அழைக்கப்படுவது ஆண் ஹார்மோன்களின் அதிகப்படியான வெளியீட்டின் விளைவு என்கிறார்கள். இதனை “ஹிர்சுட்டிசம் (Hirsutism)” என்றும் கூறலாம். இது PCOS நோயாளிகளில் மிகவும் பொதுவானதாக பார்க்கப்படுகிறது.
கன்னம், மார்பு, தொடைகள் மற்றும் பக்கங்களை பாதிக்கிறது. உடல் எடை குறைவதால் சோர்வு மற்றும் சோர்வு ஏற்படும். லேசர் முடி குறைப்பு போன்ற மருந்துகளாலும் அறுவை சிகிச்சைகளாலும் இந்த பிரச்சினையை சரிச் செய்ய முடியும்.
தேவையற்ற முடியை நிரந்தரமாக இல்லாமலாக்க வீட்டிலுள்ள சில பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
அப்படியாயின், தேவையற்ற முடிகளை நிரந்தரமாக வளர விடாமல் தடுக்கும் பாட்டி வைத்தியங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
முடிகளை நீக்க பாட்டி வைத்தியம்
1. முகத்தில் தேவையற்ற முடிகள் அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு வேக்சிங் செய்வது சரியான தீர்வாக இருக்கும். அப்படியான சிந்தனையுள்ளவர்கள் சர்க்கரையை மெழுகு தயார் செய்து அதனை தேன் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து முடிகளை நீக்கலாம். இதனை வாரத்திற்கு இரண்டு தடவை செய்ய வேண்டும்.
2. மஞ்சள், கொத்தமல்லி ஆகிய இரண்டையும் உலர்த்தி தண்ணீரில் கலந்து பேஸ்ட் தயாரிக்கலாம். இதனை முகத்தில் தடவி வந்தால் எண்ணெய்த்தன்மை கட்டுக்குள் வருவதுடன், தேவையற்ற முடிகளின் வளர்ச்சியும் கட்டுக்குள் இருக்கும்.
3. முட்டையின் வெள்ளைக்கரு, மா இரண்டையும் கலந்து முகத்தில் தடவி, சரியாக 10 நிமிடயங்கள் வரை முகத்தில் காய விடவும். காய்ந்தவுடன் தேய்த்து கழுவினால் தேவையற்ற முடிகளின் வளர்ச்சி குறையும். இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.
4. கடலை பருப்பு மா, மஞ்சள் இரண்டையும் பேக் போன்று கரைத்து முகத்திற்கு அப்ளை செய்யலாம். அத்துடன் சிறிது உளுத்தம்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள், சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கெட்டியான பேக் போன்று செய்து முகத்திற்கு போடலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தடவினால் தேவையற்ற முடிகள் நீங்கும்.
5. நாம் வழக்கமாக சாப்பிடும் பழத்தை விட பச்சை பப்பாளியில் “பப்பைன்”எனப்படும் செயலில் உள்ள நொதி உள்ளது. இது முடி வளர்ச்சியை தடுக்கிறது. பப்பாளியை விழுது போன்று அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
