Tiles அழுக்குகளை நீக்க சிரமப்படுறீங்களா? இப்படி செய்தால் எளிமையாக நீக்கலாம்
பொதுவாகவே வீட்டை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் குளியறை, சமையலறை மற்றும் வீட்டில் ஏனைய இடங்களில் இருக்கும் டைல்களை கறைப்படிந்த படியே இருக்கும். இதனை சுத்தம் செய்வது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கின்றது.
என்னதான் குளியலறை மற்றும் சமயலறையை நாம் பளீரென மாற்ற முயற்சித்தாலும், அது நடப்பதில்லை. என புலம்புபவர்கள் தான் அதிகம்.
இந்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த பிரச்சினைக்கு தீ்ர்வு கொடுக்கும் சில எளிமையான குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வினிகர்
டைல்ஸ்களுக்கு இடையே படிந்திருக்கும் விடாப்பிடியான அழுக்கை நீக்குவதற்கு வெதுவெதுப்பான நீரில் வினிகரை கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதனை அமுக்கு படிந்திருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
பின்னர் ஐந்து நிமிடங்கள் வரை அதை அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் பிரஷ் கொண்டு தேய்த்தால் அழுக்குகள் வெளியேறி தரை பளபளப்பாக மாறும்.
பேக்கிங் சோடா
டைல்ஸ்களுக்கு இடையே படிந்திருக்கும் அழுக்கை நீக்குவதற்கு பேக்கிங் சோடா மிகச்சிறந்த தெரிவாக இருக்கும். பேக்கிங் சோடாவில் அரை கப் திரவ ப்ளீச் கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் டைல்ஸ் இடையே தடவி 10 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும். பின்னர் ஈரத்துணியால் துடைத்தால் டைல்ஸ் புதிது போல் காட்சியளிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து அழுக்கு படிந்திருக்கும் பகுதிகளில் நன்றாக தெளித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஸ்க்ரப்பரை பயன்படுத்தி ஸ்க்ரப் செய்தால் அழுக்குகள் முழமையாக நீங்கிவிடும்.பின்னர் ஈரத்துணியால் துடைத்தால் போதும் புதிது போல் தோற்றமளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |