சளி சம்பந்தமான நோய்கள் இருக்கா? இந்த இரண்டு பொருள் இருந்தா போதும்
மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலரும் சளி, இருமல் என்று அவதிப்பட்டு வருகிறார்கள்.
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சளி பிரச்சனைகள் இருக்கும். இதற்கு நாம் வீட்டிலேயே மருத்துவம் செய்யலாம்.
அது என்ன என்னென்ன பொருட்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சளி இருமல் பிரச்சனை
10-12 முழு கருப்பு மிளகை உடைத்து (பொடியாக்க வேண்டாம்) தேனுடன் ஊறவைத்து, சுமார் 8-12 மணி நேரம் இரவு முழுவதும் வைத்து விட்டு அதை காலையில், மென்று சாப்பிட்டால் சளி பிரச்சனை இருக்காது.
இதனுடன் கபாலபதி போன்ற பிராணயாமாவை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.இதன் போது நீங்கள் இதன் வேகத்தை அதிகரித்தால் இது இன்னும் பலன் தரும். நமக்கு கட்டாயமாக உணவுப்பாதையில் சளிப்பிரச்சனை இருக்கும்.
மஞ்சளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உணவுப் பாதையில் உள்ள சளியை நீக்குகிறது.ஆஸ்துமா, சைனசிடிஸ் அல்லது சளி சம்பந்தமான நோய்கள் இருந்தால் மஞ்சள், குறிப்பாக மிளகு சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும்.
மஞ்சள், வேம்பு, மற்றும் மஞ்சள், கற்பூரவல்லி போன்ற பல்வேறு கலவைகளை மஞ்சளுடன் அடிப்படையாகப் பயன்படுத்தலாம். இது உடலில் உள்ள நோய்களை விரைவில் குணப்படுத்தும்.
முடிந்த அளவிற்கு பால் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நமக்கு ஒரு நோய் இருந்தால் மட்டுமே அதற்கு பாதுகாப்பாக சளி உண்டாகும்.
மூக்கில் உருவாகும் சளித் திரவத்தைப் பொருத்தவரை, மூக்கின் துவாரங்களுக்கு ஈரப்பதமளித்து பாதுகாப்பது மற்றும் வெளிப்புற துகள்களை தூசி, ஒவ்வாமை தூண்டிகள் மற்றும் பாக்டீரியா போன்றவை சிக்க வைத்து வெளியேற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும்.
நெஞ்சு சளிதூசி, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற வெளிப்புற துகள்களை சளியில் சிக்கவைத்து சுவாச மண்டலத்திலிருந்து, குறிப்பாக நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகளில் இருந்து அவற்றை அகற்றுவதே இதன் முதன்மையான நோக்கமாகும்.
ஆனால் இந்த சளி நாம் சுவாசிப்பதில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் இதை வர விடாமல் தடுப்பதற்கு குறிப்பிட்ட முறையில் வீட்டு வைத்தியங்களை செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |