அடிவயிற்றுத் தொப்பை உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலைய விடுங்க!
உடல் கட்டுக்கோப்பாக இருந்தாலும் சிலருக்கு அடிவயிற்றுத் தொப்பை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கும். எந்த உடை அணிந்தாலும் அவர்களின் அழகையே கெடுத்துவிடும்.
இது அழகை கெடுக்கும் விடயம் மட்டுமல்ல ஆரோக்கிய விஷயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு,இதய நோய் போன்றன ஏற்படுகின்றன.
image - pothunalam.com
உடல் எடையைக் குறைப்பதற்கென உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு என்பவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். அதேபோல் காலையில் ராஜாவைப் போல் அதிகமான உணவும் இரவில் ஏழையைப் போல் கொஞ்சமாகவும் உண்ண வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் நித்திரைக்கு செல்வதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். இருப்பினும் இரவு உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்.
அவை என்னவென்று பார்ப்போம்...
image - cookpad.com
சவ்வரிசி கஞ்சி
அன்றாடம் இரவு உணவில் சவ்வரிசி கஞ்சியை சேர்த்துக்கொள்வது நன்மையளிக்கும். காரணம் இது உடலை குளிரவைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஹீமோகுளோபின், சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
சுரக்காய்
சுரக்காயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்சிடென்ட் நமது இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதை இரவு உணவாக எடுத்துக் கொண்டால், உடல் எடையை குறைப்பதற்கு இலகுவாக இருக்கும்.
image - Daraz.lk
பாசிப்பயறு
இரவு உணவில் பாசிப்பயறை சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கின்றது. இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6 போன்றன காணப்படுகின்றன. இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றது.
image - Yates Australia
பப்பாளி
பப்பாளியை இரவில் உண்ணும்போது மலச்சிக்கல், வாயுப் பிரச்சினை, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்ததொரு தீர்வாக அமைகிறது.