பெண்ணை உயிருடன் கொலை செய்து இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைகோ... - அதிர்ச்சி சம்பவம்...!
பெண்ணை உயிருடன் கொலை செய்து இதயத்தை சமைத்து சாப்பிட்டு, உறவினர்களை கொலை செய்த சைகோவால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைகோ
அமெரிக்காவைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால். இவருக்கு வயது 44. இவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் லாரன்ஸுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கிடையில், ஆக்லஹாமா மாநில ஆளுநரின் தவறால் சிறை தண்டனை குறைக்கப்பட்டு, 3 ஆண்டுகளில் விடுதலையானார். சமீபத்தில் வெளியே வந்த சைகோ லாரன்ஸ் பால், தன் வீட்டு பக்கத்து வீட்டில் இருந்த ஆன்டிரியா என்ற பெண்ணை உயிருடன் கொடூரமாக கொலை செய்து, அவரது இதயத்தை கிழித்து எடுத்தார்.
வெட்டியெடுத்த இதயத்தை தன் மாமா வீட்டிற்கு எடுத்துச் சென்று அங்கு சமைத்து, வீட்டில் இருந்தவர்களுக்கு பரிமாறியுள்ளார். அந்த சமையலை அவனும் சாப்பிட்டுள்ளான். பின்பு, வீட்டில் இருந்த மாமாவையும், 4 வயதான பெண் குழந்தையையும் கத்தியால் குத்தி படுகொலை செய்தான்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலைக்காரனை கைது செய்தனர். தற்போது இந்த கொலைக்கார சைக்கோ கொடூரனுக்கு 75 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.