தொங்கும் சதையை குறைக்க இந்த ஒரு விதை இருந்தாலே போதும்..ஆயுளுக்கு தொப்பை வராது!
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது இந்த அதிக எடை பிரச்சினை தான்.
இதனால் காலையிலும் மாலையிலும் ஜிம்மிலும் டயட்டிலும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும் தற்போது இருக்கும் நவீன வளர்ச்சியால் சந்தைக்கு வந்திருக்கும் துரித உணவுகளின் தாக்கம் தான் இந்த அதிக எடை.
அந்த வகையில் அதிக எடையை எப்படி இலகுவாக குறைப்பது என தேடிபார்த்த போது கிடைக்கப்பெற்ற மிக இலகுவான வைத்தியம் தான் இந்த சியா விதைகள் வைத்தியம். இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
Image - Samayam Tamil
சியா விதைகளில் என்ன இருக்கிறது தெரியுமா?
1. இந்த சியா விதைகளில் அதிகமான நார்ச்சத்து காணப்படுவதால் சமிபாட்டிற்கு உதவி உணவை முழுமையாக சமிபாடடைய வைக்கிறது.
2. பொதுவாக இந்த விதைகளுக்கு கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி இருக்கிறது. இது உடல் பருமனை ஏற விடாமல் கட்டுக்குள் வைக்கிறது.
3. உடலுக்கு தேவையான ஒமேகா-3 அளவு இந்த சியா விதைகளில் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த அமிலம் சால்மீனில் மட்டும் தான் இருப்பதாக நினைத்திருப்போம். மாறாக மீனை விட சியாவில் 8 மடங்கு அதிகமாக இந்த அமிலம் இருக்கிறது.
4. அதிகமானோருக்கு வயது ஏற ஏற சில வலிகள் உருவாகும். இதற்கு முக்கிய காரணம் இந்த கால்சியம் குறைபாடு தான். சியா விதைகள் இந்த பிரச்சினையும் சரிச் செய்கிறது. இதிலும் சாதாரண பாலை விட 6 மடங்கு கால்சியம் சத்துக்கள் இருக்கிறது.
இதனை தொடர்ந்து இதனை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
1. யோகர்ட் ( கொழுப்பு அல்லாமல்) - 2 டேபிள் ஸ்பூன்
2. சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
Image - Samayam Tamil
செய்முறை
- இரண்டையும் ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- பின்னர் காலை உணவு உட்கொண்டதன் பின்னர் இந்த கலவை தினமும் சாப்பிட வேண்டும்.
-
இவ்வாறு 2 மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஜிம் செல்லாமல் டயட் செய்யாமல் இந்த எடை குறைப்பு செய்யலாம்.