நெஞ்சு சளி நிம்மதியை கெடுக்கின்றதா?
சளி என்றாலே மிகவும் கஷ்டமான ஒரு வியாதி என்று கூறுவார்கள்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், கூடவே இருமல், மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு, உணவு உண்பதில் விருப்பமில்லாத நிலை இவ்வாறு நிறைய வியாதிகள் சேர்ந்து கொள்ளும்.
பச்சை அல்லது மஞ்சள் என நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே எதனால் இந்த தொற்று ஏற்பட்டது என அறிந்துகொள்ள முடியும்.
சரி நெஞ்சு சளியை போக்குவதற்கான சில எளிய மருத்துவ குறிப்புகள்...
* பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகுத் தூளை கலந்து ஒரு வாரம் குடித்தால் நெஞ்சு சளி கரையும்.
* நெல்லிக்காய் சாற்றில் தேன், மிளகுத்தூள் இரண்டையும் கலந்து குடித்தால் சளி, மூக்கடைப்பு என்பன நீங்கும்.
* புதினா இலையுடன் மிளகை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் என்பன நீங்கும்.
* எலுமிச்சை சாறை சூடான நீரில் நன்கு கலக்கி பின்னர் தேன் சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி குறையும்.
* தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் கற்பூரம் சேர்த்து அந்த எண்ணெயை நெஞ்சில் தடவி வந்தால் நெஞ்சு சளி குணமாகும்.