முகம் கழுவும்போது இந்த தவறுகளை மட்டும் செய்திடாதீங்க...
கோடை காலம் வந்துவிட்டாலே அதிக வியர்வையின் காரணமாக அடிக்கடி முகத்தை கழுவ வேண்டிவரும். ஒரு சிலர் முகத்தை கழுவும் விடயத்தில் மிகவும் அலட்சியமாக இருப்பார்கள்.
உண்மையில் கோடை காலத்தில் முகம் கழுவும்போது சில தவறுகளை செய்யாமல் இருப்பது சருமத்துக்கு நன்மையளிக்கும்.
சூடான தண்ணீரில் கழுவ வேண்டாம்
கோடை காலத்தில் சூடான நீரில் முகத்தை கழுவினால் அது சருமத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். ஏனென்றால் சூடான நீரானது சருமத்திலுள்ள துளைகளை திறந்துவிடும். எனவே எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரே சிறந்த தெரிவு.
அடிக்கடி முகம் கழுவ வேண்டாம்
உஷ்ணத்தின் காரணமாக அடிக்கடி முகம் கழுவினால் சருமம் உலர்ந்து போய்விடும். அதுமாத்திரமின்றி சருமமானது அதிகமான எண்ணெய்யை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடும்.
எண்ணெய் மற்றும் க்ரீமை பயன்படுத்துதல்
முகத்தில் க்ரீம்களை பயன்படுத்தும்போது அது சருமத்தில் ஒருவித மாறுதலை ஏற்படுத்திவிடுகிறது. அதனால் கோடை காலத்தில் இயற்கையான பொருட்களையே சருமத்துக்கு உபயோகப்படுத்துவது நன்மையளிக்கும்.
முகத்தை சுத்தம் செய்தல்
குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு இரண்டு, மூன்று தடவைகளாவது முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.