கண்களை திறந்துகொண்டே தியானம் செய்யலாம்! எப்படினு தெரியுமா?
தியானம் என்பது மனதை அமைதிப்படுத்துவதற்காக செய்வது.தியானத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று கண்களை திறந்துகொண்டு செய்யும் தியானம். இன்னொன்று கண்களை மூடிக்கொண்டு செய்யும் தியானம்.
கண்களை மூடிக்கொண்டு செய்யும் தியானம் சற்று கடினமானது. ஆனால், கண்களை திறந்துகொண்டு இலகுவாக தியானம் செய்யலாம்.
இனி கண்களை திறந்துகொண்டு எவ்வாறு தியானம் செய்யலாம் எனப் பார்ப்போம்...
வீட்டில் அமைதியான ஒரு அறையில் அமர்ந்துகொண்டு, அறையினுள் நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கொன்றை வைக்க வேண்டும்.
அதன் மத்தியில் ஏதாவது ஒரு விளக்கை வைத்து திரி போட்டு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
பின்னர் அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் வெளிச்சத்தை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நம்மால் முடிந்தளவு அந்த விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அந்த விளக்கிலிருந்து வரும் ஒளியானது, கண்கள் வழியே ஊடுருவி ஆன்மாவைத் தொடும்.
இதனைத் தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் நம் மனம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.