செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை... மாலை நேரத்திற்கான அருமையான ஸ்நாக்ஸ்
மாலை நேர ஸ்நாக்ஸாக உருளைக்கிழங்கு அடை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
மசூர் பருப்பு - 1.5 கப்
உளுத்தம் பருப்பு
1/2 கப் - காய்ந்த மிளகாய்
2 - பச்சை மிளகாய்
2 - மிளகு - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 2 (மெல்லியதாக நறுக்கியது)

செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பு வகைகள் மற்றும் காய்ந்த மிளகாய் இவற்றினை கழுவி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்து, பின்பு பச்சை மிளகாய், மிளகு சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
மாவு 5 மணி நேரம் புளித்த பின்பு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், மாவினை அடை போன்று ஊற்றவும்.
அதன் மீது உருளைக்கிழங்கை ஆங்காங்கே வைத்து, அடையை சுற்றி எண்ணெய் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்தால் உருளைக்கிழங்கு அடை தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |