செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை... மாலை நேரத்திற்கான அருமையான ஸ்நாக்ஸ்
தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரசித்தி பெற்ற சில உணவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் செட்டிநாட்டின் பல புகழ்பெற்ற உணவுகளில் அடை தோசை மிகவும் பிரபலமானதாகும்.
தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளையே சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த உருளைக்கிழங்கு அடை வித்தியாசமானதாக சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு அடையை காலை அல்லது இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதில் கூடுதல் சிறப்பு இதற்கு சைடிஷ் எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.
உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் உருளைக்கிழங்கு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
மசூர் பருப்பு - 1.5 கப்
உளுத்தம் பருப்பு
1/2 கப் - காய்ந்த மிளகாய்
2 - பச்சை மிளகாய்
2 - மிளகு - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 2 (மெல்லியதாக நறுக்கியது)

செய்முறை
அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகக் கழுவி, 3-4 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும் அதனுடன் வர மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் மிளகு பிற பொருட்களுடன் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
மாவு குறைந்தது 5-6 மணி நேரம் புளிக்கட்டும். பின்னர் இதில் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடாக்கவும். கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, பாதியாக வெட்டிய வெங்காயத்தைக் கொண்டு தேய்க்கவும்.

இப்போது நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளை மாவில் நனைத்து, தோசைக்கல்லில் வட்ட வடிவில் அடுக்கவும்.
உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சரியாகச் சீரமைத்து வைத்துவிட்டு, இடைவெளிகளை மாவு கொண்டு நிரப்பிச் சரியான வட்ட வடிவத்தை உருவாக்கவும்.
அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் வேகவைக்கத் திருப்பிப் போடவும். மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
இருபுறமும் வெந்ததும் இதை தட்டிற்கு மாற்றவும். இதே போல அடுத்தடுத்த உருளைக்கிழங்குகளை சுடவும். இதை காரமான சட்னியுடன் பரிமாறலாம் இல்லையெனில் அப்படியே சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |