சுவையான ரவா அல்வா இப்படி செய்து பாருங்க.... இனி அடிக்கடி செய்வீங்க
சுவையான ரவா அல்வா நெய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
அல்வா
ரவையை கொண்டு மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம்.
பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களது ஏதாவது திண்பண்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்றால் மாலை நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமான சிற்றுண்டி இருக்க வேண்டும்.
இங்கு அரை கப் ரவையை கொண்டு பிரமாதமான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்
ரவை-1கப்
பால்-2 கப்
முந்திரி-தேவையான அளவு
உலர் திராட்சை-தேவையான அளவு
நெய்-தேவையான அளவு
வெல்லம்- 2 முதல் 3கப்

செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கவும்.
இதை ஒரு தட்டில் மாற்றி வைக்க வேண்டும். பின் அதே கடாயில் நாம் எடுத்த வெல்லம் சேர்த்து நன்கு வதக்கவும், பின் அதில் ஏலக்காயை பொடிசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

பின் இத்துடன் தண்ணீர் சேர்க்கவும். ரவையின் அளவு பொறுத்து தண்ணீர் சேர்க்கவும். இவை கொதிக்கும் நேரத்தில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்த ரவை மற்றும் பால் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின் இதை நாம் அடுப்பில் கொதிக்க வைத்த தண்ணீருடன் சேர்த்து கிளறி விடவும். இவை சரியான பதத்திற்கு வந்தவுடன் நாம் வதக்கி வைத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான ரவை அல்வா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |