சப்பாத்திக்கு சைடிஷாக வைத்து சாப்பிடும் சோயா கீமா எப்படி செய்வது தெரியுமா?
அசத்தலான சுவையில் சோயா கீமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
சோயா கீமா:
பொதுவாக இரவு டின்னர் என்றாலே நாம் அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று தான் சாப்பிடுவோம். அதுவும் சப்பாத்திக்கு என்ன சைடிஷ் வைக்கலாம் என்று யோசிப்போம்.
அந்த வகையில் சப்பாத்திக்கு சைடிஷாக செய்வது தான் இந்த சோயா கீமா. இதன் சுவை மிகவும் அசத்தலாக இருக்கும்.அது மட்டுமின்றி இது செய்வதும் ரொம்ப ஈஸி தான்.

அதனால் இது நம் வேலைபாடு குறையும். இதை சாப்பிடும் போது குழந்தைகள், பெரியோர் என அனைவரும் எப்போதும் சாப்பிடுவதை விட இந்த முறை அதிகமாக சாப்பிடுவார்கள்.
அந்த சுவையான சோயா கீமா எப்படி செய்வது என்று இங்கே கீழே காணலாம்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 1 கப்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த பச்சை பட்டாணி - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
முதலில் நாம் வாங்கிட்டு வந்த மீல் மேக்கரை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு அதை ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, புதினா சேர்த்து அதை நன்கு பொன்னிறமாகவும் வரை வதக்கவும்.

பின் அதுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தேவையான மசாலா பொருள்களளான மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
அது நன்கு வதக்கியவுடன் நாம் ஊற வைத்து எடுத்த மீல் மேக்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின் வேக வைத்திருந்த பச்சை பட்டாணியை சேர்த்து இறக்கினால் சுவையான மீல் மேக்கர் கீமா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |