கசப்பே இல்லாத பாகற்காய் உருளைக்கிழங்கு சுக்கா... ஒருமுறை வைச்சி பாருங்க
கசப்பான உணவில் ஒன்றான பாகற்காயில் உருளைக்கிழங்கு சேர்த்து சுக்கா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாகற்காய்
கசப்பான உணவு என்று பலரும் ஒதுக்கிவைக்கும் பாகற்காயில் பல சத்துக்கள் இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அருமையான உணவாக இருக்கின்றது.
இதனை குழம்பாகவோ அல்லது பொரியலாகவோ, எண்ணெய்யில் போட்டு பொரித்தோ சாப்பிட்டு வருகின்றோம். ஆனால் பாகற்காயுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சுக்கா செய்து சாப்பிட்டிருக்க மாட்டோம்.
தற்போது தயிர் சாதம், ரச சாதம் இவற்றிற்கு அருமையாக இருக்கும் பாகற்காய், உருளைக்கிழங்கு சுக்கா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பாகற்காய் - 3 (பெரியது)
வெங்காயம் - 2
தக்காளி - 2
உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
எலுமிச்சை பழம் - ½
தேங்காய் - ¼ மூடி
உப்பு - தேவையான அளவ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 2 கீறியது

செய்முறை
வெங்காயத்தினை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் காம்பு நீக்கி பொடியாக நறுக்கி தனியாக வைத்துவிட்டு, எலுமிச்சை சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.
இதே போன்று உருளைக்கிழங்கு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயினை வட்ட வடிவில் நறுக்கி விதையை நீக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய பாகற்காயை பாத்திரம் ஒன்றில் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு இவற்றினை சேர்த்து நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாய் ஒன்றில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து பாகற்காயை பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளி இவற்றினையும் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அதனுடன் தேவையான தண்ணீரையும் சேர்க்கவும்.
பின்பு கரம்மசாலா, உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை வேக வைத்து, பின்பு பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பினை அணைத்தால் காரசாரமாக பாகற்காய் உருளைக்கிழங்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |