கூழுக்கு ஏற்ற நெத்திலி கருவாடு தொக்கு.... எவ்வாறு செய்யலாம்?
அசைவ பிரியர்களுக்கு அதிகமாக பிடிக்கும் நெத்திலி கருவாடு தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெத்திலி கருவாடு
இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் கருவாடு. இதனை குழம்பாகவும், தொக்காவும் வைத்து சாப்பிடுகின்றனர்.
அதிலும் கம்பு மற்றும் கேப்பை கூழுக்கு இவை சிறந்த சைடிஷாக இருக்கின்றது. கோடை வெயிலில் மக்கள் அதிகம் விரும்பி குடிப்பது கூழ் வகைகள் ஆகும்.

இதற்கு சைடிஷாக அப்பளம், பச்சை மிளகாய் இவற்றினை வைப்பதுடன், சிறு கருவாடு துண்டை வைத்து சாப்பிட நினைப்பவர்கள் தான் அதிகம்.
அந்த வகையில் நெத்திலி கருவாடு தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு
புளி
பெரிய வெங்காயம்
தக்காளி
வெள்ளை பூண்டு
எண்ணெய்
கடுகு
வெந்தயம்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
மிளகாய் தூள்
உப்பு

செய்முறை
நெத்திலி கருவாடை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும். கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இதனுடன் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும்.

மஞ்சள்தூள் மற்றும் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இதனுடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்பு கருவாடை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கினால் அட்டகாசமாக கருவாடு தொக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |