சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி! பண்ணலாமா?

Healthy Food Recipes
By Vinoja Apr 26, 2026 06:07 AM GMT
Report

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால் நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

அந்த வகையில் சன்டே ஸ்பெஷலாக வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், அசைவமே தோற்றுப்போகும் அளவுக்கு மீல் மேக்கரை வைத்து சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் சோயா பிரியாணியை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி! பண்ணலாமா? | Ambur Style Soya Chunks Biryani Recipe In Tamil

தேவையான பொருட்கள்

சீரகச் சம்பா அரிசி - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

மீல் மேக்கர் - 1 கப்

அரைத்த மிளகாய் விழுது - 1 தே.கரண்டி

பூண்டு விழுது - ஒன்றரை தே.கரண்டி

இஞ்சி விழுது - ஒன்றரை தே.கரண்டி

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி 

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - ஒன்றரை கப்

தயிர் - 3 தே.கரண்டி

எலுமிச்சைச் சாறு - 2 தே.கரண்டி 

சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி! பண்ணலாமா? | Ambur Style Soya Chunks Biryani Recipe In Tamil

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா?

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா?

தாளிக்க தேவையானவை

நெய் - 2 தே.கரண்டி

எண்ணெய் - 1 தே.கரண்டி

கிராம்பு - 2

இலவங்கப்பட்டை -2 இன்ச்

ஏலக்காய் - 2

செய்முறை

முதலில் கிண்ணத்தில்  6 வர மிளகாயைக் உடைத்து, சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். காஷ்மீரி மிளகாயை பயன்படுத்தினால் நிறம் நன்றாக இருக்கும்.

அதனையடுத்து  தேவையான அளவு நீர் சேர்த்து, இஞ்சியை மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்னர், பூண்டையும் அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.

சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி! பண்ணலாமா? | Ambur Style Soya Chunks Biryani Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து குமிழ்கள் வந்ததும், சோயா துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். மீல் மேக்கர் தண்ணீரில் ஊறி, இருமடங்கு பெரிதாகும் வரை அப்படியே விடவும். 

அதனையடுத்து ஒரு குக்கரை அடுபபில் வைத்து சூடானதும், நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில், பூண்டு விழுதைச் சேர்க்கவும், பூண்டின் பச்சை வாசனை போனதும், இஞ்சி விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். இவையனைத்தையும் நன்றாகக் கலக்கவும். பின்னர் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும். 

சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி! பண்ணலாமா? | Ambur Style Soya Chunks Biryani Recipe In Tamil

பின்பு அதில், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மென்மையாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் சோயா துண்டுகளைப் பிழிந்து சேர்த்து நன்றாகக் கலந்துதுவிட்டு, வதக்கிக்கொள்ள வேண்டும். இறுதியாக  புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ள வேண்டும். 

சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி! பண்ணலாமா? | Ambur Style Soya Chunks Biryani Recipe In Tamil

வீட்டில் ரவையும், பாலும் இருக்கா? அப்போ வெறும் 5 நிமிடங்களில் மக்கண்டி அல்வா பண்ணலாம்!

வீட்டில் ரவையும், பாலும் இருக்கா? அப்போ வெறும் 5 நிமிடங்களில் மக்கண்டி அல்வா பண்ணலாம்!

தயிர், போதுமான அளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். அது நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் சீரக சம்பா அரிசியைக் கழுவி, கொதிக்கும் நீரில் சேர்க்கவும். குக்கரை மூடி குறைந்த தீயில் வைத்து, ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US