மசாலா தேங்காய் சாதம் ரெசிபி... குழந்தைகளுக்கு ஒருமுறை செய்து கொடுங்க
Masala Coconut Rice: குழந்தைகளின் மதிய உணவிற்கு தேங்காயைப் பயன்படுத்தி மசாலா தேங்காய் சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தைகளுக்கு மதியம் டிபன் பாக்ஸிற்கு என்ன உணவைக் கொடுக்கலாம் என்று அம்மாக்களுக்கு அதிகமான யோசனை இருக்கும்.
எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், புளி சாதம் என கலவை சாதமாக வைத்துக் கொடுப்பது வழக்கம். தேங்காய் சாதமும் செய்து கொடுப்பதுண்டு. தேங்காய் சாதத்தினை சற்று வித்தியாசமான மசாலா சேர்த்து எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு
தேங்காய் - 3/4 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
அரைத்த மசாலா
வடித்த சாதம் - 2 கப்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சேர்த்து சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இதனுடன் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். இவ்வாறு வதக்கும் போது மிதமான அளவில் தீயை வைக்கவும்.
பின்பு இதனுடன் வடித்து வைத்துள்ள சாதத்தினை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறினால் சுவையான மசாலா தேங்காய் சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |