சுவையான மதுரை ஸ்டைல் பொடிமாஸ் இப்படி செஞ்சு பாருங்க... சும்மா டேஸ்ட் அள்ளும்
சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் பொடிமாஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மட்டன் பொடிமாஸ்
பொதுவாகவே அனைவருக்கும் சைவத்தை விட அசைவம் தான் பிடிக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாருடைய வீட்டிலேயும் அசைவம் தான் இருக்கும்.
அசைவத்தில் அதிகம் விரும்பி சாப்பிடுவது மட்டன். மட்டன் குழம்பமாக தான் அனைவரும் வைத்து சாப்பிட்டிருப்பார்கள். இத்தருணத்தில் மட்டன் பெப்பர் வறுவல் செய்து அசத்தலாம்.

அதிலும் மதுரை ஸ்டைலில் மட்டன் பொடிமாஸ் எவ்வாறு செய்யலாம் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
எலும்பில்லாத மட்டன் - 400 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சிறிது
நெய் - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல் (தட்டியது)
இஞ்சி - 1/4 இன்ச் (துருவியது)
தண்ணீர் - சிறிது

பொடிமாஸ் செய்வதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 2 சிட்டிகை
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை
முந்திரி - 10 (உடைத்தது)
இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
பூண்டு - 6 பல் (தட்டியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
வேக வைத்த மட்டன்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் நாம் வாங்கிட்டு வந்த மட்டனை நன்கு கழுவி பின் அதை ஜாரில் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மட்டனை குக்கரில் சேர்த்து அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 - 3 விசில் வைத்து இறக்க வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு. உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நாம் சிறிதாக நறுக்கி வைத்த பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
அது நன்கு வதக்ககியவுடன் சிறிது கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அது வதங்கியவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இவை எல்லாம் நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் நாம் வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கி நன்கு வேக வைக்க வேண்டும்.
பின் தேங்காய் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் பொடிமாஸ் ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |