கொங்குநாடு சிக்கன் வறுவல்.... எப்படி செய்யனும்னு தெரியுமா?
கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
சிக்கன் வறுவல்
இன்று சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். அசைவ பிரியர்களின் பிடித்த உணவாக சிக்கன் இருக்கின்றது.
வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் அசைவ விருந்தை தான் பெரும்பாலான நபர்கள் வழங்குகின்றனர். அந்த வகையில் சிக்கனில் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் சுக்கா போன்றவற்றை சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் இதைவிட சிறந்த முறையில் கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க
2 இன்ச் - இலவங்கப்பட்டை
1 ஸ்பூன் - மிளகு
3 மேசைக்கரண்டி - தனியா விதை
1/2 ஸ்பூன் - சோம்பு
1/2 ஸ்பூன் - கசகசா
10 - வர மிளகாய்
5 ஸ்பூன் - தேங்காய்

சிக்கனை சமைக்க
அரை கிலோ - சிக்கன்
2 ஸ்பூன் - எண்ணெய்
1 - பெரிய வெங்காயம்
1/2 ஸ்பூன் - மஞ்சள் தூள்
தேவையான அளவு - உப்பு
ஒரு கைப்பிடி - கறிவேப்பிலை
1/2 கப் - நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
தேவையான அளவு - தண்ணீர்
செய்முறை
முதலில் வாங்கி வந்த சிக்கனை நன்றாக கழுவி வைத்துவிட்டு, கடாய் ஒன்றினை அடு்ப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, மிளகு, தனியா, சோம்பு இவற்றினை நன்றாக வறுக்கவும்.
இதனுடன் தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கி, நன்கு ஆறிய பின்பு ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரை வதக்கவும்.

வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். கழுவி வைத்துள்ள சிக்கனையும் அதனுடன் சேர்க்கவும்... அரைத்து வைத்த விழுதையும் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
தண்ணீர் வற்றியதும் சிறிது கொத்தமல்லி சேர்த்து வதக்கினால் சுவையான கொங்குநாடு ஸ்டைல் சிக்கல் வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |