தொப்பை, உடல் எடை கடகடவென குறைய வேண்டுமா? காலையில் இந்த ஒரு கஞ்சியை சாப்பிடுங்க
உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்கும் கருப்பு கவுனி வெஜிடபிள் கஞ்சியினை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு அதிகமாக கஷ்டப்படுகின்றனர். இதற்காக உணவுக்கட்டுப்பாடு, மருந்துகள், உடற்பயிற்சி என மேற்கொள்கின்றனர்.
இத்தருணத்தில் அதிக சத்துக்கள் கொண்ட கருப்பு கவுனி அரிசியில் கஞ்சியாக சாப்பிடலாம். கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.
கருப்பு கவுனி வெஜிடபுள் கஞ்சியை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி - 1 கப்
தண்ணீர் - 4 கப்
வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (கீறியது)
கேரட் - 1 (துருவியது)
பூண்டு - 6 பல் (தட்டியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
கருப்பு கவுனி அரிசியினை இரவில் தூங்குவதற்கு முன்பு 2 முறை நீரில் கழுவிய பின்பு, 4 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த அரிசியின் தண்ணீரை வடிகட்டி காலையில், மிக்ஸி ஜாரில் அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு குக்கரில் அரைத்து வைத்துள்ள அரிசியியை சேர்த்து, தனியாக வைத்துள்ள அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றிவிடவும்.

இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட், பூண்டு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
குக்கரை மூடி வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். கடைசியாக குக்கரை திறந்து துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறினால் கருப்பு கவுனி வெஜிடபிள் கஞ்சி ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |