சத்தான காலை உணவு... பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி
Green gram, Coconut Milk Rice Kanji: காலையில் சத்தான உணவாக பச்சை பயறு தேங்காய் பால் அரிசி கஞ்சி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினமும் காலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் தொடர்ந்து தோசை, இட்லி இவற்றினை மட்டும் சாப்பிட்டு வருகின்றீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு அருமையான காலை உணவை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பச்சை பயறு அதிகமான சத்துக்கள் கொண்டதாக இருக்கின்றது. இதனை காலை உணவில் எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
இந்நிலையில் பச்சை பயறுடன், தேங்காய் பால் மற்றும் அரிசி சேர்த்து செய்யும் கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை
வெந்தயம் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 15 பல் (தட்டியது)
சின்ன வெங்காயம் - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
புதினா - சிறிது
இஞ்சி - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை பயறு - 1/2 கப் (ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
அரிசி - 1 கப் (10 நிமிடம் ஊற வைத்தது)
தண்ணீர் - 2 கப்
தேங்காய் பால் - 2 கப் + 1/2 கப்

செய்முறை
முதலில் பச்சை பயிறை கடாய் ஒன்றில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு 2 முறை நீரில் கழுவி தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், பெருங்காயத் தூள், பூண்டு சேர்த்து வதக்கவும்.

இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின்பு, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
மேலும் ஊற வைத்த பச்சை பயறை தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து கிளறிவிட்டு, மஞ்சள் தூள், சுவைக்கு ஏற்ப உப்பு இவற்றினை சேர்த்து 3 நிமிடம் கிளறி விடவும்.
இதனுடன் அரிசி மற்றும் இரண்டு கப் தண்ணீர் மற்றும் இரண்டு கப் தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடிவைத்து மிதமான தீயில் 5 விசில் விட்டு இறக்கவும்.
பின்பு குக்கரை திறந்து கஞ்சியை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிதளவு கொத்தமல்லி, மீண்டும் சிறிதளது தேங்காய் பால் சேர்த்து கொதி வந்ததும் அடுப்பினை அணைத்துவிடடால் சுவையான பச்சை பயறு தேங்காய் பால் அரிசி கஞ்சி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |