கல்லீரை சுத்தப்படுத்தும் ஆப்பிள் கிவி சாலட் - செய்வது எப்படி?
ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ளதால் பல நோய்கள் குணமாகும்.
இதில் கல்லீரலை பலப்படுத்தி, மலச்சிக்கலை போக்க ஆப்பிள் கீவி சாலட் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் 6
தேன் - ஒரு தேக்கரண்டி
புதினா - சிறிதளவு
முந்திரி - 6
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - ஒரு தேக்கரண்டி
கிவி பழம் - 2
ஆப்பிள் - 1
வாழைப்பழம் - 1
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்
★ முதலில் ஆப்பிள், கிவி மற்றும் வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும்.
★ அடுத்து, பின் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டவும்.
★ பின்னர் புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முந்திரியை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
★ ஒரு பாத்திரத்தில் வெட்டிய வாழைப்பழம், ஆப்பிள், கிவி, சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
★ நறுக்கிய புதினா, மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலக்க வேண்டும்.
★இறுதியாக பரிமாறும்போது கொரகொரப்பாக பொடித்து வைத்த முந்திரியை தூவி பரிமாறினால் சாலட் தயாராகிவிடும்.