நூடுல்ஸால் ஏற்பட்ட பிரச்சினை! இறுதியில் விவாகரத்து பெற்று பிரிந்த கணவன் மனைவி
மூன்று வேளையும் நூடுல்ஸ் சமைத்து கொடுத்ததால் மனைவியை கணவர் விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூடுல்ஸ் விவாகரத்து
கர்நாடகா மாநிலம் மைசூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல். ரகுநாத் கூறுகையில், ‘பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் சிறிய பிரச்சனைக்காக ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு வந்தது.
விவாகரத்து கேட்ட கணவர், தனது மனைவிக்கு நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சமைக்கத் தெரியவில்லை கூறினார். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து கொடுக்கிறார்.
தனது மனைவி கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றால் கூட, வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கை நாங்கள் மேகி வழக்கு என்று குறிப்பிட்டுள்ளோம். இருவரும் மனம் ஒத்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர் என்கிறார்’ என நீதிபதி எம்.எல். ரகுநாத் கூறியுள்ளார்.
இன்று பெரும்பாலான விவாகரத்து பிரச்சினை கிராக பகுதிகளை விட நகர பகுதியில் தான் அதிகமாக அரங்கேறி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.