ஆந்திரா ஸ்டைலில் கொத்தவரங்காய் கிரேவி... சுலபமாக செய்வது எப்படி?
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சத்துள்ள காய்கறிகளில் ஒன்றான கொத்தவரங்காய் அவ்வளமாக மக்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படியே இந்த காய் வாங்கினால் பொரியல் மட்டுமே செய்து சாப்பிடுவார்கள்.
இதனை கிரேவி பதத்தில் செய்தால் சாதம், சப்பாத்தி இவைகளுக்கு அட்டகாசமான சுவையில் காணப்படும். அதிலும் ஆந்திர ஸ்டைலில் கொந்தவங்காய் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு...
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
கிரேவிக்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (கீறியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தவரங்காய் - 1/4 கிலோ
அரைத்த மசாலா
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் வறுக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடானதும் சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் பொடியாக வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி, அதனுடன் தக்காளியை சேர்க்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்தும் வதக்கவும்.
தேவைக்கு ஏற்ப உப்பு, நறுக்கிய கொத்தவங்காய் சேர்த்து பச்சை வாசனை போக 3-4 நிமிடம் வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து தேவையான தண்ணீர், சேர்த்து குக்கரை மூடி வைத்து 2-3 விசில் சேர்த்து இறக்கவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |