ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?
ஆந்திரா ஸ்டைல் சுவையான கருவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
கருவேப்பிலை சட்னி
நாம் சமையலில் பயன்படுத்தும் அன்றாட பொருளில் ஒன்று தான் கறிவேப்பிலை. அதிகமான சத்துக்களைக் கொண்ட இதனை பச்சையாகவும் அல்லது சமைத்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் நமது முடி காடு போன்று அடர்த்தியாக வளர உதவ செய்கிறது. நாம் எப்போதுமே கறிவேப்பிலையை தாளிக்கிறதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றோம்.
இந்நிலையில் ஆந்திர ஸ்டைலில் கறிவேப்பிலையை எவ்வாறு சட்னி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
50 கிராம் கறிவேப்பிலை
20 கிராம் புளி
100 கிராம் பச்சை மிளகாய்
தேவையான அளவு உப்பு
5 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் வெந்தயம்
1 ஸ்பூன் சீரகம்
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
2 ஸ்பூன் தனியா
10 பூண்டு பல்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை
முதலில் கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின்பு கடலை பருப்பு, உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு, கழுவி காய வைத்த கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீவில் வதக்கவும்.
மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பாதியாக அரைக்கவும். நாம் முதலில் வதக்கிய எண்ணெய் கரைத்து வைத்திருக்கும் புளியை சேர்க்கவும்.

புளியுடன் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து கெட்டியாக வந்ததும் அரைத்து வைத்த கறிவேப்பிலை சட்னியை சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் கறிவேப்பிலை சட்னி தயார். இதனை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் அநேக நாட்கள் பயன்படுத்தலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |