தோசைக்கு இந்த ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி செஞ்சு பாருங்க...
Kadappa Chutney Recipe in Tamil: வீட்டில் சமைப்பவர்களுக்கு சமைப்பதை விட பெரிய பிரச்சனையாக இருப்பது என்ன சமைக்கலாம் என முடிவு எடுப்பது தான். நம் வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ்-ன் புண்ணியத்தில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவும் காலை உணவும் இட்லி, தோசை தான்.
தேவையான பொருட்கள்:
கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி - ஒரு துண்டு (ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- தக்காளி - 2 (நன்றாக பழுத்தது
) - கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- புளி - சிறிதளவு(சிறிய நெல்லிக்காய் அளவு)
- தேங்காய் - ½ மூடி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு
- ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா?
செய்முறை:
- பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும் .
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
- தக்காளியை ஒன்று இரண்டாக வதக்க நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்
. - எண்ணெய் காய்ந்ததும் அதில் எள்ளு சேர்த்து வதக்கவும். -
பின் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், உரித்து வைத்த பூண்டு, மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். - அதனுடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும் .
- அதில் புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்
. - கடைசியாக அதனுடன் தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும் .
- நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்
. - எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் .
- கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்
. - இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான கடப்பா சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |