Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா?
சமீபக்காலமாக தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் அதிகமாக வருகிறது. அதற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
சமையல் நிகழ்ச்சிகளை அதிகமாக பார்ப்பதற்கான நோக்கமே புதிதான ஏதாவது ரெசிபி செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம் என்பது தான்.
அந்த வகையில், குக் வித் கோமாளி சீசன் 6-ல் கலந்து கொண்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன், கொள்ளு சாதமும் அதற்கு தொட்டுக்கொள்ள எள்ளு துவையலும் செய்திருந்தார். அவருக்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டது.
எலுமிச்சை, தக்காளி, தேங்காய், புளி சாதம் வரிசையிலான கலவை சாதங்களில் கொள்ளு சாதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
அப்படியாயின் உளுந்து சாதமும், எள் துவையலும் அற்புதமான காம்போவாக உள்ளது என நிகழ்ச்சியின் நடுவர் கூறினார். அதனை நமது வீடுகளிலும் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
உளுந்து சாதம்
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்தம்- முக்கால் கப்
- பருப்பு- முக்கால் கப்
- துருவிய தேங்காய்- முக்கால் கப்
- வர மிளகாய்
- பூண்டு
- வெந்தயம்- டீஸ்பூன்
- உப்பு
- நல்லெண்ணெய்- ஒரு ஸ்பூன்
- சாப்பாட்டு அரிசி- ஒரு கப்
- தண்ணீர் - மூன்று கப்
சாதம் செய்முறை
முதலில் உடைத்த கருப்பு உளுந்தம், பருப்பு இரண்டையும் கடாயில் போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
கொஞ்சமாக சிவந்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, அதே கடாயில் வெந்தயத்தை போட்டு தனியாக வறுக்கவும்.
கருப்பு உளுந்து, வெந்தயம், சாப்பாட்டு அரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 2-3 முறை நன்கு கழுவ வேண்டும்.
அதன் பின்னர், ஒரு குக்கரில் மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கும் வரை காத்திருந்து, கழுவி வைத்திருக்கும் அரிசியை சேர்த்து மூடவும்.
அரிசி வெந்து வரும் பொழுது தேவையான அளவு உப்பு, துருவிய தேங்காய் சேர்ந்து கலந்து விடவும். சாதம் பாதியளவு வெந்ததும் குக்கரை மூடி ஒரு விசில் அல்லது 5 நிமிடம் வரை காத்திருக்கவும்.
உளுந்து சாதம் நன்றாக வெந்து தயாராகிவுடன் நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறலாம்.
எள்ளு துவையல்
தேவையான பொருட்கள்
- கருப்பு எள்ளு- ஒன்றரை ஸ்பூன்
- வர மிளகாய்- எட்டு
- பூண்டு- ஒரு பல்
- புளி- நெல்லிக்காய் அளவு
- உப்பு- கால் டீஸ்பூன்
- துருவிய தேங்காய்- கால் கப்
செய்முறை
ஒரு கடாயில் கருப்பு எள்ளு போட்டு வறுக்கவும்.
அதன் பின்னர், ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு வறுத்த எள்ளு, வர மிளகாய், பூண்டு, புளி, உப்பு, துருவிய தேங்காய் அதனுடன் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்தால் சுவையான எள்ளு துவையல் தயார்!
இந்த துவையலை கொள்ளு சாதத்துடன் பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |