இனி புளி போட்டு தேய்க்க வேண்டாம்... இப்படி செய்தால் போதும் செம்பு பாத்திரங்கள் பளபளக்கும்!
பொதுவாகவே வீட்டில் செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாகும்.வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தும் காமாட்சி அம்மன் விளக்கு, பஞ்ச பாத்திரம், தூபக் கால், மணி, இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமான விடயம் தான்.
பித்தளை பாத்திரங்கள், செம்புப் பாத்திரங்கள் இவைகளை பளபளப்பாக தேய்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. பண்டைய காலங்களில் புளி, தேங்காய் நார் இவைகளைப் போட்டு அழுத்தம் கொடுத்துத் தான் இப்படிப்பட்ட பொருட்களை சுத்தம் செய்வார்கள்.
ஆனால் இது தற்காலத்தில் நேரவிரயமாக பார்க்கப்படுகின்றது. பெரியளவில் உடலை வருத்திக்கொள்ளாது பாதுகாப்பான மற்றும் இயற்கையான முறைகள் மூலம் செம்பு பாத்திரங்களை வீட்டில் கிடைக்கும் சில எளிமையாக பொருட்களை கொண்டு எவ்வாறு விரைவில் பளபளப்பாக மாற்றலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை:
ஒரு பெரிய எலுமிச்சையை எடுத்து, பாத்திரத்தின் மேல் மெதுவாக தேய்க்கவும். எலுமிச்சையில் உள்ள இயற்கை அமிலம் செம்பில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் கருமையை சிறப்பாக நீக்கி செம்பு பாத்திரங்களை பளபளப்பாக மாற்றும்.
உப்பு மற்றும் வினிகர்:
உப்பு மற்றும் வினிகர் சேர்த்து தயாரிக்கப்படும் கலவை, செம்பு பாத்திரங்களில் உள்ள கருமையை அகற்ற, மற்றும் பளபளப்பை நீண்டநாள் வரை வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவை நன்கு தேய்த்தால், செம்பு பாத்திரம் புதியது போல் மின்னும். இவை அனைத்தும் இரசாயனமற்ற, பாதுகாப்பான, குறைந்த செலவில் செய்யக்கூடிய தீர்வுகளாகும்.
செம்பு பாத்திரங்கள் நம் கலாசாரத்தின் ஒரு அங்கமாகவே இருந்தாலும், அவற்றை முறையாக பராமரித்தாலே அதன் அழகு, நன்மைகள், ஆயுட்காலம் அனைத்தும் நீடிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |