சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? இத அடிக்கடி குடிங்க போதும்!
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது பொதுவாக காணப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.
இந்த நாள்பட்ட நோயானது கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது சுரக்காமலோ இருக்கும் போது ஏற்படுகிறது.
இந்நிலையில் இரத்த சர்க்கரை சேமிப்பிற்காக செல்களுக்குள் நுழைய முடியாமல் போகிறது. இதன் விளைவாக சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
கீழே சர்க்கரை நோய் வராமல் இருக்க குடிக்க வேண்டிய பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை அடிக்கடி குடியுங்கள்.
பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, பாகற்காய் ஜூஸ் இன்சுலினை செயல்படச் செய்கிறது.
சர்க்கரை போதுமான அளவு பயன்படுத்தப்படும் போது, அது கொழுப்பாக மாற்றப்படாது மற்றும் இது உடல் எடையையும் குறைக்க உதவும்.
பாகற்காய் ஜூஸில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சாரன்டின் என்னும் செயலில் உள்ள பொருள் உள்ளது. அதிலும் ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக்க மற்றும் நிர்வகிக்க பெரிதும் உதவும்.
வெந்தய நீர்
சர்க்கரை நோய்க்கான மிகவும் பயனுள்ள ஓர் இயற்கை வைத்தியப் பொருள் தான் வெந்தயம்.
ஆய்வு ஒன்றில், தினமும் பத்து கிராம் வெந்தய விதையை சுடுநீரில் ஊற வைத்து, நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வெந்தய நீருக்கு சர்க்கரை நோயாளியின் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் உள்ளது.
மேலும் இதில் நார்ச்சத்து உள்ளதால், இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. மொத்தத்தில் வெந்தய நீர் உடல் சர்க்கரையைப் பயன்படுத்தும் முறையை மேம்படுத்த உதவுகிறது.
க்ரீன் டீ
பிஎம்சி மருந்தியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, ஆய்வில் பங்கேற்ற ஆரோக்கியமான பங்கேற்பாளர்களில் க்ரீன் டீ க்ளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது தெரிய வந்தது.
சர்க்கரை நோய் உள்ள எலிகளில் இரத்த சர்க்கரை அளவையும் இந்த பானம் குறைத்தது. சர்க்கரை நோயை நிர்வகிப்பதில் க்ரீன் டீ பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இன்னும் கூடுதலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.