உங்கள் துணை உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க
பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது.
மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது ஆனால் அது ஒரு போதும் அதிகாரத்தால் முடியாத காரியம் தான். இதற்கு முதலில் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் அற்ற தூய்மையான அன்பு முக்கியம்.
இவ்வாறு நீங்கள் உண்மையான அன்பு வைத்திருந்தால் அதை உங்கள் துணை புரிந்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்தினால் போதும் நீங்கள் சொல்லதை உங்கள் துணைவர் கேட்பார். இதனை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எவ்வாறு வெளிப்படுத்துவது?
ஒருவரை பிடிப்பதற்கும் பிடிக்க வைப்பதற்கும் அழகு முக்கியமல்ல. அவருடன் உணர்ச்சி பூர்வமாக நெருக்கமாவதே முக்கியம். ஒரு உறவில், குறிப்பாக காதல் உறவுகளில் உணர்ச்சிப்பூர்வமான ஒட்டுதல் இருந்தால் அந்த உறவு நீடித்து நிலைக்கும்.
இப்படி உணர்ச்சிப்பூர்வமாக நெருக்கமாக, உங்களது எண்ணங்கள், உணர்வுகள், வருங்கால கனவுகள் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் இது உதவும். இது, உங்களை நீங்கள் இன்னொருவரின் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ளவும் உதவும்.
எந்த உறவு நீடிக்க வேண்டுமானாலும் கட்டாயம் ஒன்றாக நேரம் செலவிடுவது இன்றியமையாதது. உங்களுக்குள் இருக்கும் பிணைப்பை இன்னும் ஆழமாக்க இது உதவும். இருவருக்கும் பொதுவாக பிடித்த செயல்களை ஒன்றாக செய்ய ஆரம்பியுங்கள்.
அது, ஒரு ரொமாண்டிக் இரவில் நெடுந்தூர பயணம் மேற்கொள்வதாக இருக்கலாம். வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதாக இருக்கலாம். ஒன்றாக உணவு சாப்பிடுவதாக இருக்கலாம். இப்படி, சில விஷயங்களை ஒன்றிணைந்து நீங்கள் செய்ய ஆரம்பிப்பதால் உங்களுக்குள் இருக்கும் பிணைப்பு இறுக்கமாகும்.
காதலில் பல விஷயங்கள் சொல்லாமல் புரிந்து விடும் என்பார்கள். ஆனால், இந்த கூற்று எல்லா நேரங்களிலும் உண்மையாகி விடாது. ஏனென்றால், காதல் உறவில் இருக்கும் இருவருமே வெவ்வேறு நபர்கள்.
உங்களுக்கு பிடித்த நபர் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை வார்த்தைகளால் அல்லது உங்கள் நடவடிக்கைகளால் கூறினால்தான் அது அவருக்கு புரியும். சிறு சிறு செயல்கள் செய்தாலும் அவரை அதற்காக பாராட்டுவது, எதிர்பாராமல் கட்டிப்பிடிப்பது, ஒரு முத்தம் கொடுப்பது என அனைத்தும் உங்கள் காதல் நடவடிக்கைகளுள் அடங்கும்.
இது, உங்களது பார்ட்னரை முக்கியமான நபராக உணர வைக்கும். இது, அவருக்கு உங்கள் மீது உள்ள காதலை இன்னும் இரட்டிப்பாக்கும். இப்படி நிலையாக இருக்கும் பாசம் உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிபூர்வமான தொடர்பை மேம்படுத்த உதவும்.
காதலில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்றாலும், உங்களது ஒரு சில அந்தரங்கங்களை எல்லாம் உங்கள் காதலருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது, உங்கள் காதல் உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.
அது மட்டுமன்றி, காதலை தாண்டி உங்களுக்கென்று இருக்கும் தனித்துவமான விஷயங்களையும் நீங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு தனி மனிதராக, உங்களுக்கென்று இருக்கும் சுதந்திரத்தை பராமரிக்கவும்.
இது காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களை சுவாரஸ்யமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பரஸ்பர மரியாதையையும் வளர செய்யும்.
உங்களால் மாற்றிக்கொள்ள முடியாத விடயங்களை உங்கள் துணைக்காக மாற்றிக்கொள்வதாக எப்போதும் உறுதியளிக்காதீர்கள் இது தற்காலிகமானதாகவே இருக்கும் அதற்கு பதிலாக உங்கள் துணைக்கு புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.இதுவே நிரந்தரமான தீர்வுாக இருக்கும்.
எந்த சூழ்நிலையிலும் உறவை தக்கவைக்க வேண்டும் என்பதறடகான பொய் சொல்லாதீர்கள். நடந்தவற்றை சொல்லி வாய்ப்பு கேளுங்கள் இது உங்கள் மேல் மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் நிச்சயம் மேம்படுத்தும்.
இவ்வாறு உறவை உண்மையானதாக பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தினால் போதும் நீங்கள் சொல்வதை உங்கள் துணை தானாக கேட்பார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |